Homeசெய்திகள்க்ரைம்போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி - கொலை - போலீஸ் விசாரணை

போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி – கொலை – போலீஸ் விசாரணை

-

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முன்விரோதம் காரணமாக போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி வெட்டிக்கொலை போலீஸ் விசாரணை.

போலீசாரல் தேடப்பட்ட குற்றவாளி - கொலை - போலீஸ் விசாரணை

சேலம் மாவட்டம், சங்ககிரி வாணியர் காலனியைச் சேர்ந்த யமஹா மூர்த்தி(எ) மூர்த்தி (45). இவருக்கும் வேலம்மாவலசு பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது . இந்நிலையில் கடந்த அக்டோபர் 13ந்தேதி  மூர்த்தி தனது நண்பரான சங்ககிரி ,ஆர் எஸ் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (29) என்பவரிடம் சென்று ,கனகராஜ் உனது குடும்பத்தை தவறாக ஊருக்குள் பேசி வருவதாக கூறியுள்ளார்.

அதனையடுத்து அசோக்குமார் கனகராஜிக்கு போன் செய்து உன்னிடம் பேச வேண்டும் உடனே சின்னாக்கவுண்டனூர் ஐயப்பன் கோவில் அருகே உள்ள பகுதிக்கு வா என கூறியுள்ளார். உடனே கனகராஜ் அவரது நண்பர் சரவணனுடன் அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மூர்த்தி, அசோக்குமார் ஆகிய இருவரும் கனகராஜை கெட்ட வார்த்தையில் திட்டி, அடித்து கீழே தள்ளி உள்ளனர். அதனையடுத்து மூர்த்தி, கனகராஜின் கைகளை  பின்புறம் பிடித்துக் கொண்டு அசோக்குமாரை அறிவாளால் வெட்டும்படி கூறியுள்ளார்.

அப்போது அசோக்குமார் கையில் வைத்திருந்த அருவாளால் கனகராஜை வெட்ட வந்தபோது கனகராஜ் நண்பர் சரவணன் தடுத்துள்ளார். அப்போது அசோக்குமார் சரவணனை பார்த்து யாரடா நீ அவனை காப்பாற்றுவதற்கு முதல்ல நீ சாவுடா என்று சொல்லி அறிவாளால் சரவணனின் கழுத்தை பார்த்து வெட்ட முயற்சித்த போது   உடனே சரவணன் கையால் தடுத்துள்ளார். அதில் சரவணனின் கையின் மோதிர விரலில் வெட்டுப்பட்டு விரல் துண்டாக தொங்கியது .

அப்போது சரவணன் கனகராஜ் சத்தம்போட மூர்த்தி, அசோக்குமார் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த சரவணனை, கனகராஜ் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று சங்ககிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இதுகுறித்து சரவணன்  சங்ககிரி காவல் நிலையத்தில்  இவர் புகாா் அளித்ததின் பேரில் சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து அசோக்குமாரை கைது செய்தனர்.  இதில் தலைமறைவான மூர்த்தியை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சங்ககிரி பழைய ஏடிசி டிப்போ பஸ் ஸ்டாப் அருகே மர்ம நபர்கள் மூர்த்தியை துரத்தி வந்து, சின்னாக்கவுண்டனூர் சாலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி டிஎஸ்பி ராஜா தலைமையிலான போலீசார் கொலை செய்யப்பட்ட மூர்த்தியின் சடலத்தை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே கனகராஜிக்கும், மூர்த்திக்கும் முன் விரோதம் இருந்து வந்ததால் இதன் காரணமாக மூர்த்தி கொலை செய்யப்பட்டு  இருக்கலாம் என சந்தேகித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  குற்றவாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். சங்ககிரியில் நள்ளிரவு நேரத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி அறிவாளால் வெட்டி  கொலை செய்யப்பட்ட சம்பவம் சங்ககிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய – கள்ள நோட்டு கும்பல்

MUST READ