ரயில்வே ஒப்பந்த பணிகளை கால தாமதம் செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைக்க ₹ 25 லட்சம் லஞ்சம் பெற்ற விசாகப்பட்டினம் வால்டர் ரயில்வே கோட்டா மேலாளர் உள்பட தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் இருவரை சிபிஐ அதிகாரிகளால் கைது
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வால்டர் ரயில்வே கோட்டத்தில் இருந்து கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டப்பணிக்கு ஒரு நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது. டெண்டர் எடுத்த நிறுவனம் பணிகள் தாமதம் செய்ததால் ரயில்வே நிர்வாகம் அந்த நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது. அந்த அபராத தொகையை குறைக்க விசாகப்பட்டினம் வால்டர் கோட்ட ரயில்வே மேலாளர் (டிஆர்எம்) சவுரப் பிரசாத்திடம் ஒப்பந்த நிறுவனத்தினர் கேட்டு கொண்டனர். இதற்காக டி.ஆர்.எம்.சவுரப் பிரசாத் ₹ 25 லட்சம் லஞ்சம் கேட்டார். இதனையடுத்து மும்பை மற்றும் புனேவைச் சேர்ந்த இரண்டு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அவரைச் சந்தித்து அபராதத் தொகையைக் குறைக்க ₹ 25 லட்சம் லஞ்சம் கொடுக்க சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து தனியார் நிறுவனத்துக்கு ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டிய ₹. 3.17 கோடி பில் நிலுவையில் உள்ள தொகையை வழங்கியதோடு அபராத தொகையை குறைத்தார்.
இதற்காக இம்மாதம் 16ம் தேதி டி.ஆர்.எம். சவுரப் பிரசாத் ₹ 25 லட்சம் அந்த நிறுவனத்திடம் இருந்து லஞ்ச பணம் பெற்றுள்ளார். இதனை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் டி.ஆர்.எம். சவுரப் பிரசாத்வுடன் மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனப் பிரதிநிதி ஒருவரும், புனேவைச் சேர்ந்த மற்றொரு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை நடத்தப்பட்ட சோதனையில், டிஆர்எம்மிடம் இருந்து ₹ 87.6 லட்சம் பணம், ₹.72 லட்சம் மதிப்புள்ள நகைகள், இதர சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் மற்றும் வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாகப்பட்டினத்தில் உள்ள டிஆர்எம் பங்களா மற்றும் அவருக்கு தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கிரிமினல் சதி மற்றும் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக டிஆர்எம் உடன் இணைந்து தனியார் அமைப்புகளின் பிரதிநிதிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீரன்” படபாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சிக்கி கொண்ட சென்னை தனிப்படை போலீஸ்