- Advertisement -
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே ( ஜூலை-16 ) இரவு நடந்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா் .
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம் வாழவந்தி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாவின் மனைவி ஆண்டிச்சி (66), இவா் ஜூலை-16 இரவு திருச்சி நாமக்கல் நெடுஞ்சாலையை வாழவந்தி பேருந்து நிறுத்தம் அருகே கடக்க முயன்றபோது, நாமக்கல் நோக்கிச் சென்ற காா் மோதியதில் இறந்தாா்.
தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, மூதாட்டி மகன் செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில் காா் ஓட்டுநரான ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தனக்கொடி மகன் சிவராஜ் (42) மீது வழக்குப் பதிந்து விசாரணை றே்கொண்டு வருகின்றனர்.