Homeசெய்திகள்க்ரைம்கோபியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் உயிரிழப்பு

கோபியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு

-

- Advertisement -
கோபி அருகே உள்ள நாகர்பாளையத்தில் துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழப்பு..
கண்ணன்

கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). விவசாயியான இவர், வீட்டின் அருகே உள்ள அவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் விவசாய பயிர்களுடன் சந்தன மரங்களையும் வளர்த்து வருகிறார். கடந்த சில மாநங்களுக்கு முன் நன்கு வளர்ந்த இரண்டு மரங்களை, மர்ம நபர்கள் வெட்டிக்கொண்டு இருந்துள்ளனர். வெட்டப்பட்டு கீழே விழுந்த சந்தன மரத்தின் சத்தம் கேட்டு அருகில் இருந்த வீட்டின் உரிமையாளர், மோகன்லாலுக்கு தகவல் தெரிவிக்கவே, மோகன் லால் சென்று பார்ப்பதற்குள் மரத்தை வெட்டி எடுத்து சென்று விட்டனர். அந்த சம்பவத்திற்கு பிறகு இரவு நேரங்களில் சத்தம் கேட்கும் போதெல்லாம், கையில் துப்பாக்கியுடன் தான் மோகன்லால் வீட்டை விட்டு வெளியே வருவது வழக்கம். மோகன்லாலின் தாத்தா காலத்தில் இருந்தே உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்து உள்ளனர்.

இன்று இரவு வழக்கம் போல் வீட்டில் மோகன்லால், அவரது மனைவி ராஜதிலகம், மகன் தியானேஷ்வரன், மோகன்லாலின் தாயார் கோகிலாம்பாள், மோகன்லால் மனைவியின் தாயார்(மாமியார்) சுப்புலட்சுமி ஆகியோர் தூங்கி கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு மோகன்லால் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த இரண்டு நாய்கள் வழக்கத்தை விட சத்தமாக குறைக்கவே, சந்தேகமடைந்த மோகன்லால் கையில் துப்பாக்கியுடன் வீட்டை விட்டு வெளியே வந்து உள்ளார். அப்போது வீட்டிற்கு சிறிது தூரத்தில் சுமார் 100 அடி தூரத்தில் இருந்து ஒரு நபர் கையில் இரண்டு அடி நீளமுள்ள அரிவாளுடன் அவரை வெட்டுவதற்காக ஓடி வந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, கையில் இருந்த துப்பாக்கியால் அந்த நபரை நோக்கி சுட்டுள்ளார்.

அதில் குண்டு அந்த நபரின் மார்பில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து மோகன்லால் இதுகுறித்து கோபி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி போலீசார் துப்பாக்கியை கைப்பற்றி மோகன்லாலிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், துப்பாக்கியால் சுட்ட போது அருகில் உள்ள கோபி நாகர்பாளையம் சாலையில் இருவர் சத்தமிட்டதாக தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் அந்த பகுதி முழுவதும் தீவிர சோதனை செய்த போது, அங்கு இரு சக்கர வாகனத்துடன் மறைந்து இருந்த கோபி அருகே உள்ள மொடச்சூர் செங்கோட்டையன் காலனியை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன்கள் மூர்த்தி மற்றும் விஜய் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து பிடிபட்ட மூர்த்தி மற்றும் விஜயிடம் நடத்திய விசாரணையில் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர் அவர்களது தந்தை கண்ணன் (50) என்பதும், கண்ணன், சுமை தூக்கும் தொழிலாளியாக கோபியில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. நள்ளிரவில் அங்கு என்ன வேலை என போலீசார் விசாரணை செய்த போது, அவர்கள் இருவரும் தந்தையை தேடி வந்ததாக கூறினாலும், இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோபி வட்டாட்சியர் சரவணக்குமார் மற்றும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த கண்ணனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியது குறித்து அப்போது கோபி காவல் நிலையத்திற்கு மோகன்லால் தகவல் தெரிவித்த போது, சம்பவ இடத்திற்கு போலீசார் வந்துள்ளனர். அப்போது மரங்களை வெட்டி கடத்திய நபர்கள், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு தப்பினர். அதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தை, மோகன்லால் தோட்டத்திலேயே நிறுத்தி வைக்குமாறு போலீசார் கூறி உள்ளனர்.

இருசக்கர வாகனத்தை கேட்டு யாராவது வந்தால் தகவல் தெரிவிக்குமாறு கூறி இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சென்று உள்ளனர்.

சந்தன மரங்களை வெட்டி கடத்திய போதே, கிடைத்த இரு சக்கர வாகனத்தை வைத்து, சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்களை கைது செய்து இருந்தால், தற்போது துப்பாக்கிசூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது.

 அனைத்து தேர்வுகளும் ரத்து! புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அறிவிப்பு!

MUST READ