திருவள்ளுர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் வசித்து வருபவர் நரிக்குறவ வகுப்பை சேர்ந்த கார்த்திக் என்ற பார்த்திபன் வயது (25) இவர் மனைவி இந்திராவுடன் புட்லூர் ரயில் நிலையத்தில் ஏறி ஏறி ஊசி பாசிமணி வியாபாரம் செய்து வந்துள்ளார். பின்னர் இரவு புட்லூர் ரயில் நிலைய நடைமேடையில் படுத்து உறங்குவதுமாக இருந்து வந்துள்ளனர்.
அதேபோன்றுதான் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பலூன் வியாபாரி தமிழரசன் அவருடைய மனைவி மாதா இருவரும் ரயிலில் பலூன் வியாபாரம் செய்வதும் கோவில் திருவிழாக்களில் சென்று பலூன் வியாபாரம் செய்வதுமாக இருந்து வந்துள்ளனர். புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் பலூன் வியாபாரம் செய்யும்போதும் தமிழரசன் அவருடைய மனைவி மாதா கார்த்திக் இந்திரா அறிமுகமாகியுள்ளனர்.
வழக்கமாக ரயிலில் தமிழரசன் மற்றும் கார்த்திக் குடும்பத்தினர் ஊசி பாசுமணி பலூன் வியாபாரம் செய்துவிட்டு இரவு புட்லூர் ரயில் நடைமேடையில் வந்து தங்கி காலை புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் வியாபாரம் செய்ய முடிவு செய்து புட்லூர் நடைமேடையில் தங்கியுள்ளனர்.
அப்போது திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி சென்று மின்சார ரயில் புட்லூர் ரயில் நிலையத்தில் நின்றுள்ளது. புட்லூர் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய பயணிகள் அப்போது ரயிலில் இறங்கி நடைமேடையில் நடந்து சென்றுள்ளனர். அதில் இரண்டு இளம் பெண்கள் ரயிலில் இறங்கி நடைமேடையில் நடந்து சென்ற போது தமிழரசன் அவருடைய மனைவி மாதா கீழே விரித்திருந்த போர்வை மிதித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த தமிழரசன் அந்த இரண்டு இளம் பெண்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் அந்த இளம் பெண்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். மன்னிப்பு கேட்டு பிறகும் கஞ்சா போதையில் இருந்த தமிழரசன் வாயில் வந்த ஆபாச வார்த்தைகளை பேசி திட்டி உள்ளார். அதைப் பார்த்த நரிக்குறவ இளைஞர் கார்த்திக் இவனால பப்ளிக் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறி அந்த இரண்டு இளம் பெண்கள் எதிரே தமிழரசனை திட்டி அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நரிக்குறவ இளைஞர் கார்த்திக் தனது மனைவியுடன் இரவு 8:30 மணி அளவில் அதே நடைமேடையில் போர்வை விரித்து இரவு இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திக் பின் தோளில் கை வைத்து தட்டிய தமிழரசன் குவாட்டர் பாட்டில் உடைத்து தன் கையில் வைத்திருந்த பாட்டிலைக் கொண்டு இரண்டு முறை கார்த்திக் கழுத்துப் பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு அதே மின்சார ரயிலில் தப்பி உள்ளார்.
கணவனை மடியில் சாய்த்துக் கொண்டு இந்திரா கதறி அழுததை கண்டு மனம் வருந்திய ஆட்டோக்காரர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு துடித்துக் கொண்டிருந்த கார்த்திகை தூக்கி ஆட்டாவில் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே கார்த்தி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்து கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் புட்லூர் ரயில்வே நடைமேடை பகுதிக்கு வந்து சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டனர். கார்த்திக் குத்திவிட்டு தப்பி ஓடிய தமிழரசனை பிடிக்க புட்லூர் ரயில் நிலையம் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கி கடற்கரை ரயில் நிலையத்தில் தன் மனைவியிடம் செல்வதும் பின்னர் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி மெரினா மெரினா கடற்கரைக்கு செல்வதமாக சிசிடிவி பதிவாகியுள்ளது. அப்போது தனது மனைவியுடன் மெரினா கடற்கரையில் இருந்த தமிழரசனை மட்டும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.