Homeசெய்திகள்க்ரைம்பண்ருட்டி : போலி லாட்டரி விற்ற 4 பேர் கைது

பண்ருட்டி : போலி லாட்டரி விற்ற 4 பேர் கைது

-

பண்ருட்டியில் போலியான ஆன்லைன் லாட்டரியில் பணம் பறிகொடுத்த 55 வயது உடைய முதியவர் இனி யாரும் ஏமாற கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் கதறியதால் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து  சிறையில் அடைத்தனர் .

பண்ருட்டி : போலி லாட்டரி விற்ற 4 பேர் கைதுகடலூர் மாவட்டம் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகே பாலமுருகன்  என்பவருக்கு சொந்தமான ஜெராக்ஸ் கடை உள்ளது இந்த கடையில்  போலியாக ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாகவும் இதனை வாங்கி பல பேர் லட்சக்கணக்கான ரூபாய் அளவில் பணத்தை இழந்து உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் மனவேதனையில் பண்ருட்டி காவல் நிலையத்தில் 55 வயது உடைய  முதியவர் ஒருவர் புகார் தெரிவித்து கதறியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து பண்ருட்டி போலீசார் புகாரின் அடிப்படையில் ரகசியமாக போலி லாட்டரி விற்பனை செய்யும் கடையை கண்காணித்து வந்த நிலையில் போலி ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

பண்ருட்டி : போலி லாட்டரி விற்ற 4 பேர் கைதுஇதனை அடுத்து பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 47 ),விஸ்வநாதன் (வயது 58),சக்திவேல்(வயது 32) மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கபாலி(வயது 44) ஆகிய நான்கு பேரை பண்ருட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 2.27,000 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் 5000 பணம் இருச்சக்கர வாகனம்  லாட்டரி அடிப்பதற்கு பயன்படுத்திய இரண்டு லட்சம் மதிப்புள்ள  கம்ப்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர்.

MUST READ