Homeசெய்திகள்க்ரைம்திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்...!

திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்…!

-

திருவள்ளூர் அருகே ஆடுகள் வாயைக்கட்டி காரில் கடத்திய கும்பல் பொதுமக்கள்  தர்ம அடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்...!திருவள்ளூர்  அடுத்த தண்ணீர்குளம்  தண்டலம் பகுதியில் கடந்த 12 ந் தேதி அன்று  கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் அங்கு காரில் வந்த நான்கு பேர் கொண்ட  கும்பல்  ரஞ்சித் என்பவரின் வீட்டிலிருந்த ஆடுகளைத் திருடி அதன் வாயை கயிறால் கட்டி காரில் கடத்தி தப்ப முயன்றுள்ளனர்.

ஆடு கடத்துவதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்  கூச்சலிடவே பொதுமக்கள் ஒன்று கூடி காரை வழிமறித்து காரில் இருந்தா நான்கு பேரையும் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து அவர்களை ஊர் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிட பகுதியில் அவர்களை  கயிறால் கட்டி பொதுமக்கள் அடித்து தும்சம் செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை  மீட்டு திருடிய 2 ஆடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்து அவர்கள் திருடுவதற்கு பயன்படுத்திய காரை  போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருவள்ளூரில் ஆடு திருட வந்த கும்பலை அடித்து உதைத்த மக்கள்...!ஆடுகள் உரிமையாளரிடம் புகாரை பெற்றுக் கொண்டு ஆடு திருடிய செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 4 பேரையும் போலீசார் காவல் நிலையம் வைத்து விசாரணை மேற்கொண்டு சிஎஸ்ஆர் மட்டும் பதிவு செய்து மீண்டும் விசாரணைக்கு வர வேண்டுமென அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் கைது செய்யாதது ஏன் என்று போலீசாரிடம் கேட்டபோது அன்றைய தினம் கனமழை பெய்து வந்ததால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க சிரமம் ஏற்பட்டதாகவும், அதனால் மீண்டும் நாளை காவல் நிலையம் அவர்களை வர வைத்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் அருகே கனமழையை பயன்படுத்தி காரில் வந்த கும்பல் ஆடுகளின் வாயைக்கட்டி திருட முயன்றவர்களை  பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ