திருச்செந்தூர் அருகே தனியார் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக கோவையில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் திருச்செந்தூர் அழைத்து வந்து விசாரணையை தொடங்கிய போலீசார். பள்ளி முதல்வர் செயலாளர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் தனியார் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங். இவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை வெளியே கூறக்கூடாது என்றும் கண்டித்துள்ளதாக தெரிகிறது.
ஒருதலை காதலால் விபரீதம் – கோபத்தில் பெண்னின் தந்தையை சுட்ட இளைஞர் கைது!
இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் சென்று முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் இதை மூடி மறைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் மாணவிகளின் பெற்றோர்கள் 100க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதற்கிடையில் கோவையில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை கோவை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
மேலும் பள்ளியின் முதல்வர் சார்லஸ் சுவீட்லி மற்றும் பள்ளி செயலர் செய்யது அகமது ஆகிய இருவரையும் கைது செய்து திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று இரவு திருச்செந்தூரில் இருந்து தனிப்படை போலீசார் பொன்சிங்கை அழைத்து வரச் சென்றனர். இவர்கள் மூன்று நபர்கள் மீதும் போசோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.