Homeசெய்திகள்க்ரைம்இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்களை – சிசிடிவி மூலம் கைது செய்த...

இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்களை – சிசிடிவி மூலம் கைது செய்த போலீஸ்

-

- Advertisement -

பொன்னேரி அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து லாவகமாக இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்கள். சிசிடிவி காட்சிகளை கொண்டு 17வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்த போலீஸ். இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்களை – சிசிடிவி  மூலம் கைது செய்த போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தீபா. இவரது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று பிற்பகல் வீட்டில் இருந்த போது ஆடு கூச்சலிடும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் ஆட்டை திருடி சென்றுள்ளனர்.இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்களை – சிசிடிவி  மூலம் கைது செய்த போலீஸ்

இது குறித்து தீபா பொன்னேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளைஞர்கள் இருவர் யாருமில்லாததை நோட்டமிட்டு ஆட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ஆடு திருட்டில் ஈடுபட்ட முஸ்லீம் நகரை சேர்ந்த அனீப் (29), தவுலத் பாஷா (19), 17வயது சிறுவன் என மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி ஒரு கோடிக்கு மேல் மோசடி செய்த நபர் கைது

 

MUST READ