ஆயிரம் விளக்கில் நடந்த 20 லட்ச ரூபாய் வழிப்பறி வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர், ஐடி அதிகாரிகள் மூவர் கைது மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ் ,பாபு ஆகிய மூன்று பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.
திருவல்லிக்கேணியில் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தனியார் நிறுவன ஊழியர் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளனர்.
இவர்களை ஏற்கனவே போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த போது ஆயிரம் விளக்கில் ஒரு வழிப்பறியில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர். ராயபுரம் தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த டிசம்பர் 11ம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் ஐந்து பேரையும் கைது செய்ததற்கான ஆவணங்களை புழல் சிறை அதிகாரிகளிடம் ஆயிரம் விளக்கு போலீசார் வழங்கினர். ஆயிரம் விளக்கு வழிப்பறி வழக்கில் தலைமறைவாக உள்ள வணிகவரித்துறை அதிகாரிகள் சுரேஷ், சதீஷ் ,பாபு ஆகிய மூன்று பேரையும் போலீஸார் தேடிவருகின்றனர்.
ராணிபோல பார்த்துகிட்டேன், கள்ளக்காதலுடன் மனைவி ஓட்டம்…கதறிய கணவன்!