Homeசெய்திகள்க்ரைம்போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

-

- Advertisement -

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆவடி அடுத்த பட்டாபிராமில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்து தப்பி சென்ற பெண்ணை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

ஆவடி அருகே பட்டாபிராம் பாபு நகரில் G.M.ஜவஹர்லால் ஜெயின் என்ற நகை அடகு கடை உள்ளது. நேற்று மாலை ஆறு மணி அளவில் கடைக்குள் நுழைந்த ஒரு பெண் தன் கழுத்தில் இருந்த நகையை அவசரமாக கழற்றி தன்னுடைய கணவருக்கு உடல் நிலை சரியில்லை, அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று பரபரப்பாக கூறி நகையை அடகுகடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார்.

அடகு கடை உரிமையாளரோ கொஞ்சமும் தாமதிக்காமல் நகையை வேகமாக எடை போட்டு விட்டு அந்த பெண்ணின் பெயரை கேட்டுள்ளார். அந்த பெண்ணோ சிறிதும் தாமதிக்காமல் தன் பெயர் லட்சுமி என்றும் தனது கணவர் பெயர் பாலாஜி என்றும் அவசரமாக சொல்லியுள்ளார். மேலும் அந்த பெண் அளித்த முகவரியை ரசீதில் எழுதிக் கொண்டு 80,000 ரூபாயை எண்ணி கொடுத்துள்ளார்.

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

சிறிது நேரம் கழித்து அந்த பெண் அளித்த நகையை பரிசோதித்த கடை உரிமையாளர் ஜவஹர்லால் “அது போலி நகை” என்பதை கண்டுப்பிடித்தார். உடனே திரும்பி பார்த்து தேடிய போது அந்த பெண் மாயமாக மறைந்து போனார்.

இது குறித்து உடனடியாக ஜவஹர்லால் மகன் ஹரிகந்த் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிந்து லட்சுமி என்ற மர்ம பெண்ணை தேடி வருகின்றனர். மேலும் முதல் கட்டமாக அந்த பெண் அளித்த ஔவையார் தெரு, சோழன் நகர் என்ற விலாசமும் போலியானது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

மேலும் அந்த பெண் இதுபோன்ற தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உடனடியாக அந்த பெண்ணை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று அதே பகுதியை சேர்ந்த அருண் என்ற வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

MUST READ