Homeசெய்திகள்க்ரைம்பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை! பிளஸ் டூ மாணவர்கள் கைது

பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை! பிளஸ் டூ மாணவர்கள் கைது

-

பாலிடெக்னிக் மாணவர் அடித்துக்கொலை! பிளஸ் டூ மாணவர்கள் கைது
அடித்துக்கொலை

பாலிடெக்னிக் மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிளஸ் டூ மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் விருதுநகர் மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராம கணேஷ். 16 வயதான இந்த சிறுவர் பாலிடெக்னிக்கில் படித்து வந்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் வீட்டில் இருந்து வெளியே போய்விட்டு பின்னர் வீடு திரும்பிய போது ரத்த காயங்களுடன் இருந்திருக்கிறார்.

இதை பார்த்ததும் பதறிப்போய் பெற்றோர் அது குறித்து விசாரிக்க, மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லி
இருக்கிறார். அன்றைய தினத்திலிருந்து சிவராம கணேசுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கிறது. நேற்று திடீரென்று அவர் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளார்கள். அங்கு சிவராம கணேசை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்திருக்கிறது.

இதைக் கேட்டதும் பெற்றோர் கதறி அழுதிருக்கிறார்கள். தன் மகன் மரணத்தில் சிவராமகனேஷ் தந்தை செல்வராஜ்க்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. மரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டேன் என்று ரத்தக்காயங்களுடன் வந்த தன் மகன் இறந்து விட்டதால் தன் மகன் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று மம்சாபுரம் போலீசில் அவர் புகார் அளித்திருக்கிறார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மம்சாபுரம் போலீசார், சிவராமகனேஷ் மரத்திலிருந்து கீழே விழுந்து இரத்த காயங்களுடன் வீட்டுக்கு வந்ததாக சொன்ன அந்த நாளில் அவருடன் யார் வெளியே சென்றார்கள் என்று விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தான் ஊர் கோயில் திருவிழாவிற்காக நண்பர்கள் ஒரே மாதிரி டீசர்ட் அடித்திருக்கிறார்கள். அந்த டீசர்ட்டுக்கு சிவராமகனேஷ் பணம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான் சம்பவத்தன்று நண்பர்கள் மது அருந்தி இருக்கிறார்கள். போதையில் டீசர்ட்டுக்கு பணம் தராத விவகாரம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள் சிவராமகணேசனை தென்னை மட்டையால் தாக்கி இருக்கிறார்கள். இதில் தான் கடுமையாக தாக்கப்பட்டு இரத்தம் சிந்தியவாறு வீட்டிற்குச் சென்ற சிவராமகிருஷ்ணன் உயிரிழந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. இதன் பின்னர் சிவராம கணேசன் அடித்துக் கொன்ற பிளஸ் டூ மாணவர்கள் இரண்டு பேர் மற்றும் சிறுவன் உட்பட மூன்று
பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

MUST READ