Homeசெய்திகள்க்ரைம்பூஜா கெட்கரின் முறைகேடு - ஐஏஎஸ் தேர்வுகளில் பங்கேற்க தடை

பூஜா கெட்கரின் முறைகேடு – ஐஏஎஸ் தேர்வுகளில் பங்கேற்க தடை

-

- Advertisement -

பல்வேறு முறைகேடுகள் செய்து தேர்வு எழுதி தேர்வாகி சர்ச்சைக்கு உள்ளான பூஜா கெட்கரின் குடிமைப் பணி தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மட்டுமில்லாமல் அவர்  தொடர்ந்து தேர்வுகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

பூஜா கெட்கரின் முறைகேடு - ஐஏஎஸ் தேர்வுகளில் பங்கேற்க தடை

கடந்த 2022-ம் ஆண்டு (Upsc தேர்வில்)  குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி  நியமனம் வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்த செல்வி பூஜா மனோரமா திலிப் கெட்கர், பல்வேறு ஈடுபட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். தனது அடையாளங்களை மாற்றி பலமுறை தேர்வு எழுதியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) விசாரணை நடத்தியது. முறைகேடுகள் தொடர்பாக பூஜா கெட்கரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது யுபிஎஸ்.சி.

பூஜா கெட்கரின் பதில் மற்றும் அவர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், பூஜா கெட்கர், குடிமைப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதுடன்

மட்டுமில்லாமல், அவர் எந்த ஒரு வேலைக்கான தேர்வு/ நேர்காணல்களில் பங்கேற்கவும் நிரந்தர தடை விதித்தும் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி : ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்

பூஜா கெட்கர் மீதான புகாரை தொடர்ந்து கடந்த 2009 முதல் 2023 வரை 15 ஆண்டுகளில் நடந்த குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 15,000-க்கும் மேற்பட்டோரின் தரவுகள் மற்றும் ஆவணங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறு ஆய்வு செய்துள்ளது.

 

இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும்  தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது.

MUST READ