ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் – 3 பேரிடம் வாக்குமூலம்
கோயிலுக்கு வந்த பெண்ணை ஆசை வார்த்தை கூறி அர்ச்சகர் கார்த்திக் ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.
சென்னை க்கு வந்த இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறிய ஏமாற்றி அவரை பாலியல் வன்புணர்வு செய்து ஏமாற்றிய அர்ச்சகர் கார்த்திக் மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள கார்த்திகை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காளிகாம்பாள் கோயில் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.
தலைமை அர்ச்சகர் காளிதாஸ், கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட மூன்று பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோயில் பணியாளர்கள் மேலும் சிலருக்கு சம்மர் அனுப்பி விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.