கோபியில் உள்ள மாவட்ட சிறையில் செல்போன், 2 பேட்டரிகள், கஞ்சா பறிமுதல். சிம்கார்டை கடித்து தின்ற விசாரணை கைதி.
ஈரோடு வடக்கு காவல் நிலைய பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாபுராஜ்(30) என்ற விசாரணை கைதியிடம் இருந்து செல்போன், பேட்டரி, கஞ்சாவை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல். சிறைக்குள் செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட போது சிம்கார்டை கடித்து தின்றதாக தகவல்.
சிறைக்குள் அடைக்கப்பட்டு உள்ள விசாரணை கைதியிடம் இருந்து செல்போன், பேட்டரி மற்றும் கஞ்சா கிடைத்தது எப்படி என விசாரணை. ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன் இதே சிறையில் விசாரணை கைதி ஒருவரிடம் இருந்து இரண்டு செல்போன்கள், பேட்டரி, இயர்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் செல்போன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.