Homeசெய்திகள்க்ரைம்ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை - இருவர் கைது

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை – இருவர் கைது

-

- Advertisement -

மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏ.டி.எம் கார்டை திருடி ரூ.2.8 லட்சத்துக்கு நகை வாங்கிய காய்கறி கடைகாரர் மற்றும் அவரது தோழி கைது.

ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.2.8 லட்சம் கொள்ளை - இருவர் கைது

மதுரை மாநகர் எல்லீஸ்நகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி கிருஷ்ணசாமியின் (72) பிள்ளைகள் வெளிநாட்டில் இருப்பதால் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

அதே பகுதியில் காய்கறிகடை நடத்தும் லட்சுமணன் என்பவர் பல வருடங்களாக கிருஷ்ணசாமிக்கு பழக்கம். கடந்த 12ம் தேதியன்று வங்கிக்கு சென்ற கிருஷ்ணசாமி, கடைசியாக லட்சுமணனின் காய்கறிகடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பின் தனது ஏ.டி.எம் கார்டை காணவில்லை என தேடியுள்ளார். 15ம் தேதியன்று கிருஷ்ணசாமியின் செல்போனுக்கு நகைக்கடை ஒன்றின் பெயரில் 2 லட்சத்தி 80 ஆயிரத்தி பணம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி வங்கிக்கு சென்று விசாரித்துவிட்டு ஏடிஎம் கார்டை லாக் செய்த பின் நகைக்கடையில் விசாரித்தபோது பெண் ஒருவர் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி முதல் நாள் 4 பவுன் நகையும் ஒன்றரை கிராம் நகையும் வாங்கியதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து கிருஷ்ணசாமி அளித்த புகாரில் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் காய்கறி கடைக்காரரான லட்சுமணன் மற்றும் அவரது தோழியான டெய்லர் கடை நாகேஸ்வரி ஆகிய இருவரும் கிருஷ்ணசாமியின் வயோதிகத்தை பயன்படுத்திக்கொண்டு ஏ.டி.எம். கார்டை திருடியது தெரிய வந்து, போலிசார் இருவரையும் கைது செய்தனர்.

இயக்குனர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்த மஞ்சு வாரியர்!

MUST READ