Homeசெய்திகள்க்ரைம்எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை - இருவர் கைது

எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை – இருவர் கைது

-

கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற பொற்கொல்லரை மடக்கி ரூ.54 லட்சம் கொள்ளை அடித்த இருவரை கே.ஜி சாவடி போலீசார் கைது செய்தனர்.எட்டிமடை அருகே பொற்கொல்லரிடம் ரூ.54 லட்சம் கொள்ளை -  இருவர் கைது

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்தவர் செல்வகுமார் (45). இவர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள தங்க நகை விற்பனை கடையில் பொற்கொல்லராக பணியாற்றி வருகிறார். மேலும் அடிக்கடி செல்வகுமார் தனது இருசக்கர வாகனத்தில் கோவைக்கு வேலைக்காக வந்து செல்வதால், அவ்வப்போது பாலக்காட்டில் உள்ள கடைகளில் பழைய தங்கம் இருந்தால் அதனை செல்வகுமார் மூலம் கோவையில் உள்ள கடையில் விற்பனை செய்ய கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 8 தேதி வழக்கம் போல் கோவை வந்துவிட்டு மீண்டும் பெரிய கடை வீதியில் உள்ள ரோகித் என்பவரது கடையிலிருந்து தான் கொடுத்த பழைய தங்க நகைக்கான தொகை ரூ.54 லட்சத்தை பெற்றுக் கொண்டு, செல்வகுமார் தனது இரு சக்கர வாகனத்தில் கேரளா நோக்கி சென்றுள்ளார்.

அவருடன் அவரது நண்பர் செல்வகுமார் (45). என்பவரும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இருவரும் எட்டிமடை – வேலந்தாவளம் சாலையில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்வகுமாரின் வாகனத்தை வழிமறித்ததோடு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.54 லட்சத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் செய்வதறியாது நின்ற செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகிய இருவரும் பாலக்காடு சென்று அங்கு தங்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பஸ் டிரைவரே பயணியின் நகையை திருடியதால் பரபரப்பு

அதன் பின்னர் மீண்டும் கோவை கே.ஜி சாவடி காவல் நிலையத்தில் கொள்ளை தொடர்பாக புகார் அளித்தனர். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுமித் நாகேஷ் சலூங்கே (25) மற்றும் அவரது நண்பர் சனீஸ் கோவிந்தன் சலூங்கே (35). ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் திருச்சூரில் தங்கி தனியார் தங்க நகை விற்பனை கடையில் பணியாற்றி வந்ததும், செல்வகுமார் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் அடிக்கடி பழைய தங்கத்தை கோவைக்கு சென்று விற்பனை செய்துவிட்டு பணத்துடன் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வருவதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். இதனை கண்காணித்த இருவரும் கோவையிலிருந்து சுரேஷ் பணத்துடன் வருவதை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ