Homeசெய்திகள்க்ரைம்சேலத்தில் ரவுடி கைது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

சேலத்தில் ரவுடி கைது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

-

சேலத்தில்  போலீசார் பல்வேறு இடங்களில் கஞ்சா சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீராணம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிலர் வீடுகளில்  நடத்தப்பட்ட சோதனையில்,  வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

சேலத்தில் ரவுடி கைது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

மேலும் அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  அவர்களிடம் நடத்திய தொடர்  விசாரணையில் ,  அம்மாபேட்டை, ராமலிங்கம் தெருவை   சேர்ந்த ரவுடி சாபீர் , கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது

இதனை அடுத்து அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம், ராமலிங்கம் தெருவில் உள்ள ரவடி சபீர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.  அப்போது வீட்டில் இருந்த  பெரிய பை ஒன்றை சோதனை செய்த போது,  அதற்குள் கட்டு கட்டாக பழைய 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.  அப்போது பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நேரத்தில்,  பிரபல ரவுடியான சாபீர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும் ,  பண மதிப்பிழப்பின் போது தன்னிடமிருந்த பணத்தை மாற்ற முடியாமல் பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் ரவுடி கைது. மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பின்னர் போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில்,  பண மதிப்பிழப்பு செய்த சமயத்தில் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 500 ரூபாய் , 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தருமாறு சபீரிடம் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.  ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் ரவுடி சாபீரால் , அதனை மாற்ற முடியவில்லை. 

இதற்கு இடையில் பணம் கொடுத்தவருக்கும் ரவுடி சபீருக்கும் இடையே விரோதம் ஏற்பட்டுள்ளது.  மேலும் பணத்தை கொடுத்த தொழில் அதிபர்  இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  இதனால் பணத்தை தனது வீட்டிலேயே பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது

தனை தொடர்ந்து போலீசார்,  ரவுடி சாபீரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் .மேலும் கைப்பற்றப்பட்ட பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடியை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

கஞ்சா விற்பனை செய்த ரவுடி சபீர் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது,  பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட  500 , 1000 ரூபாய் நோட்டுகள் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ