Homeசெய்திகள்க்ரைம்ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் தற்காப்பு நடவடிக்கை- போலீஸ் தரப்பு விளக்கம்

ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் தற்காப்பு நடவடிக்கை- போலீஸ் தரப்பு விளக்கம்

-

ரவுடி சீசிங் ராஜா என்கவுண்டர் சம்பவம் முழுக்க முழுக்க தற்காப்பிற்காக மட்டுமே நடத்தப்பட்டது என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜாவை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், நீலாங்கரை அக்கரை பகுதியில் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் அதிகாலையில் என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியானது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டபோது ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா வேளச்சேரியில் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் தொடர்பு இருக்கிற காரணத்தினால் அது தொடர்பாக விசாரணை நடத்த அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துனர்.

அப்போது மறைத்து வைத்திருந்ததை ஆயுதத்தை எடுத்துக் கொடுத்த போது, அந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கி ரவுடி சீசிங் ராஜா சுட்டுள்ளார். அப்போது தற்காப்புக்காக போலீசார் மீண்டும் சுடும் பொழுது ரவுடி சீசிங் ராஜா உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

இதையடுத்து தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி சம்பவயிடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,வேளச்சேரி வழக்கு விசாரணை தொடர்பாக தேடப்பட்டு வந்த சீசிங் ராஜா ஆந்திர மாநிலம் கடப்பா ராஜம்பெட் என்கின்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சீசிங் ராஜாவை நேற்று இரவு ரயில் மூலம் சென்னைக்கு தனிப்படையினர் அழைத்து வந்தனர்.சென்னை வேள்ச்சேரி ஆய்வாளரிடம் வேளச்சேரி வழக்கு தொடர்பாக சீசிங்ராஜா ஒப்படைக்கப்பட்டார். வேளச்சேரி காவல் நிலையத்தில் ஆனந்தன் என்பவரை துப்பாக்கி காட்டி மிரட்டிய விவகாரத்தில் சீசிங் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட காரணத்தினால் தொடர்புடைய துப்பாக்கியை பறிமுதல் செய்வதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அக்கரை என்னும் பகுதியில் சீசிங் ராஜா தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்துள்ளார். அப்பொழுது இதை சற்றும் எதிர்பாராத போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ள திருப்பி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் இளங்கனி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் வேளச்சேரி ஆய்வாளர் விமல் தற்காப்பிற்காக இரண்டு முறை சுடும் பொழுது ரவுடி சிசிங் ராஜா துப்பாக்கி குண்டு பட்டு மயங்கி விழுந்தார்.
இதில் காயமடைந்த சீசிங் ராஜாவை மருத்துவமனை கொண்டு பரிசோதனை செய்த போது சீசிங் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரவுடி சீசிங் ராஜா மீது 6 கொலை வழக்குகள் உட்பட 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் நீதிமன்றம் சீசிங் ராஜாவிற்கு 10 முறை பிடியாணை வழங்கியும் இதுவரை அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வந்துள்ளார். மேலும் தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சிசிங் ராஜா இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுடைய விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எந்த ஒரு தொடர்பும் சீசிங் ராஜாவிற்கு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் நாங்கள் வேளச்சேரியின் வழக்கு தொடர்பாகவும் நீதிமன்ற பிடி ஆணை தொடர்பாகவும் ஆஜராகாமல் இருந்த காரணத்தினால் மட்டுமே சீசிங் ராஜாவை நாங்கள் கைது செய்துள்ளோம்.

இந்த என்கவுண்டர் சம்பவம் என்பது முழுக்க முழுக்க தற்காப்புக்காக மட்டுமே நடைபெற்ற ஒன்று ஏற்கனவே முடிவு செய்து நடத்தப்பட்ட ஒன்று அல்ல என சிபி சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

MUST READ