Homeசெய்திகள்க்ரைம்பாளையங்கோட்டை நீதிமன்ற வாசல் முன்பு ரவுடி கொலை - 4 பேர் கைது

பாளையங்கோட்டை நீதிமன்ற வாசல் முன்பு ரவுடி கொலை – 4 பேர் கைது

-

பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசல் முன்பு இளைஞர் ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் வந்து கொலை செய்து தப்பிச்சென்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கீழநத்தம் மேலூரை சேர்ந்தவர் மாயாண்டி இவர் இன்று காலை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் ஆஜர் ஆவதற்காக நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார் . நீதிமன்ற நுழைவு வாயிலில் அவர் மோட்டார் சைக்கிளில் திரும்பும்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே காரில் ஒரு கும்பல் வந்தது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள் மீது காரை மோத விட்டு மாயாண்டியை அருவாளுடன்  விரட்டியது.

பாளையங்கோட்டை நீதிமன்ற வாசல் முன்பு ரவுடி கொலை - 4 பேர் கைதுஅங்கிருந்து மெயின் ரோட்டுக்கு மாயாண்டி ஓடிச் சென்ற நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரி வெட்டி கொலை செய்தது. இதில் அவரது கை மணிக்கட்டு துண்டாக விழுந்தது.இரண்டு கால்களும் துண்டானது.. நிலை குலைந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் ..

பாளையங்கோட்டை நீதிமன்ற வாசல் முன்பு ரவுடி கொலை - 4 பேர் கைதுஉடனடியாக காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று மாயாண்டி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு கீழநத்தம் பஞ்சாயத்து இரண்டாவது வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை வழக்கில் கீழ நத்தம் கீழூரை சார்ந்த ராமகிருஷ்ணன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் முன் விரோதம் காரணமாகவே கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த கீழநத்தம் மேலூரை சார்ந்த மாயாண்டி சரித்திர பதிவேடு குற்றவாளி (943/23)  என்பது குறிப்பிடதக்கது.

MUST READ