லஞ்சம் பெற்ற வழக்கில் டில்லியில் அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவை சிபிஐ கைது செய்தனர்.
கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை வியாபாரியிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டு உள்ளார். பணம் தரவில்லை என்றால் கைது செய்யப்படுவர் என மிரட்டி உள்ளார்.
சந்தீப் சிங் யாதவ் கேட்ட தொகையை நகைக்கடை வியாபாரியால் தர இயலாததால் ரூ.20 லட்சம் தருமாறு பேரம் பேசியு இருக்கிறார். ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை சந்தீப் சிங் யாதவ் பெற்ற போது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். அவரை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.