Homeசெய்திகள்க்ரைம்திண்டுக்கலில் ரூ.4.66 கோடி கையாடல் - பெண்  அலுவலர் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கலில் ரூ.4.66 கோடி கையாடல் – பெண்  அலுவலர் உட்பட 2 பேர் கைது

-

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல் விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண்  அலுவலர் உட்பட 2 பேர் கைது பரபரப்பு

திண்டுக்கலில் ரூ.4.66 கோடி கையாடல் - பெண்  அலுவலர் உட்பட 2 பேர் கைதுதிண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன்35. இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் கணக்குப் பிரிவு இளநிலை உதவியாளராக பணியாற்றினார்.

நாள்தோறும் மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த க்கூடிய சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி பணத்தில் இருந்து ரூ.4.66 கோடியை வங்கியில் செலுத்தாமல் போலியான ஆவணங்கள் தயார் செய்தும், மாநகராட்சி அதிகாரிகள் போன்று  போலி கையெழுத்து போட்டும் கையாடல் செய்தார்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பணம் கையாடல் செய்ததாக சரவணன் முறையாக கண்காணிக்காத  கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை  சஸ்பெண்ட் செய்தார். மேலும் கையாடல் தொடர்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதிபிடம்  மாநகராட்சி ஆணையர் மோசடி குறித்து புகார் மனு அளித்தார் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து

முதல் கட்டமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு  சரவணனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர் பின்னர் சரவணனை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சிக்கலில் அதிகாரிகள்

சரவணனிடம் நடத்திய விசாரணையில் மாநகராட்சியில் பணியாற்றும் சில அலுவலர்களுக்கு இந்த கையாடல் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று 08.08.24 குற்றப்பிரிவு போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கணக்குப் பிரிவு கண்காணிப்பாளர் சாந்தி, நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ், ஆகியோரை கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2ல் ஆஜர் படுத்தினர் மெஜிஸ்ட்ரேட் 14 நாள் நீதிமன்ற காவலில்  வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

MUST READ