நிலமோசடி வழக்கில் திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம் எல் ஏ பொன்.சரஸ்வதி என்பவரின் கணவர் பொன்னுசாமி தலைமறைவாகி உள்ளார்.
வீட்டிற்கு விசாரணைக்கு வந்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பி ஓட்டம்.
ஏமாற்றத்துடன் திரும்பிய மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்ட மன்ற தொகுதி அஇஅதிமுக முன்னாள் எம்எல்ஏ திருமதி.பொன்.சரஸ்வதி. இவரது கணவர் பொன்னுசாமி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பஸ் அதிபராகவும் உள்ளார். திருச்செங்கோடு ராஜுவ் நகரில் வசித்து வரும் இவர் கடந்த பல வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் . தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலங்களை வாங்கி என்பிஎஸ் நகர் என்ற பெயரில் நகர்களை அமைத்து விற்பனை செய்து வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு நபரிடம் கடந்த அதிமுக ஆட்சியில் நிலத்தை வாங்கிய அவர் அதற்கான பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார் .
இது குறித்து அந்த நபர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அவரை மாவட்ட பொருளாதார பிரிவு போலீசார் இன்று கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். போலீசார் வருவதை கண்ட பொன்னுசாமி கைலி அணிந்து இருப்பதால் வேறு உடை மாற்றி கொண்டு வருவதாக போலீசாரிடம் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று பின்புறம் வழியாக தப்பி சென்றுள்ளார். நீண்ட நேரமாக காத்திருந்த போலீசார் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
சென்னை விமானநிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்- 9 பேர் கைது
அதிமுக முன்னாள் எம் எல் ஏ பொன் சரஸ்வதியின் கணவர் திரு.பொன்னுசாமி அதிமுக முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணியின் நெருங்கிய உறவினர் மட்டுமின்றி அவரது பினாமி என்பது குறிப்பிடத்தக்கது.