Homeசெய்திகள்க்ரைம்லாட்டரி தடையை மீறி வந்தவாசியில் ரகசிய விற்பனை -  இருவர் கைது

லாட்டரி தடையை மீறி வந்தவாசியில் ரகசிய விற்பனை –  இருவர் கைது

-

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட  லாட்டரி சீட்டை ஆன்லைன்  மூலமாக விற்பனை –  காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்து இரண்டு பேர் கைது செய்தனர் –  48.50 லட்சம் ரூபாய், 83 சவரன் தங்க நகைகள் 6 செல்போன்கள்,ஒரு மடிக்கணினி போலீசார்  பறிமுதல் –  இவர்கள் மீது எற்கனவே காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது – நள்ளிரவில்  பரபரப்பு.

லாட்டரி தடையை மீறி வந்தவாசியில் ரகசிய விற்பனை -  இருவர் கைதுதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழக  அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்த இரண்டு பேரை காவல்  கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்து நள்ளிரவில் கைது செய்து அவர்களிடம் இருந்த 48.50 லட்சம் ரூபாய் பணம், 83 சவரன் தங்க நகைகளை, மடிக்கணினி ,6 செல்போன்கள்  போலீசார் பறிமுதல் செய்தனர்.

வந்தவாசி பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் அருண்(எ) அருணாச்சலம்(51) இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வந்தார் . இவர் வந்தவாசி நகரில் பொட்டி நாயுடு தெருவில் இரண்டு வீடு கட்டி அதில்  ஒரு வீட்டில் ஆடம்பரமாக குடும்பத்துடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும்  ஒரு வீடு வாடகைக்கு  விட்டு விட்டார்.

பின்னர் தமிழக அரசால்  தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை  20 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை ஆன்லைன்  மூலமாக நடத்தி  வந்தார். இந்த நிலையில் தமிழக  அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக அருண்(எ)  அருணாச்சலம் என்பவர் விற்பனை நடத்துவதாக வந்தவாசி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

லாட்டரி தடையை மீறி வந்தவாசியில் ரகசிய விற்பனை -  இருவர் கைதுதகவலின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா(பொறுப்பு),வந்தவாசி காவல்  துணை கண்காணிப்பாளர் கங்காதரன் மற்றும் போலீசார் வந்தவாசி யாதவர் தெருவின் முகப்பில் நின்று வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த  அருண் (எ) அருணாச்சலத்தை மடக்கி  விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணான பதில் அளித்ததில்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது காவல்  கண்காணிப்பாளர் லாட்டரி  சீட்டை நடத்தி வருவது தெரியவந்தது. பின்னர்  வந்தவாசியில் பொட்டிநாயுடு தெருவில் உள்ள  அருண் (எ) அருணாசலம் வீட்டிற்கு  சென்ற காவல்  கண்காணிப்பாளர்,துணை கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சென்றனர்.  அப்போது  அருண்  வீட்டை கண்ட போலீசார்  வியப்பு அடைந்தனர். மேலும் போலீசார் வீட்டில்  உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசார்  அருண் வீட்டில் உள்ளே சோதனை செய்த போது பல்வேறு  அதிர்ச்சிகள் கிடைத்தது. அவர் வீட்டில் இருந்த மடிக்கணினி சோதனை செய்த போது  கணினி மூலம் பல்வேறு  இடங்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக விற்பனை  நடத்துவது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் வந்தவாசி  சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில்  ஏஜென்ட் மூலமாகவும், வாடிக்கையாளர் மூலமாக விற்பனை செய்தது  தெரியவந்தது. மேலும் வீட்டில்  போலீசார் அங்குலம் அங்குலமாக  சோதனை செய்த போது தனி அறையில்  பதுகி வைத்து இருந்த  48.50 லட்சம் ரூபாய்  பணம்,83 சரவன் தங்க நகைகள்,ஒரு மடிக்கணினி,6 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

மேலும் வந்தவாசி காவல் நிலையத்தில் உள்ள அருணை காவல் கண்காணிப்பாளர் துருவித் துருவி விசாரணை மேற்கொண்ட போது இவருடன்  செங்கல்பட்டு மாவட்டம்  கோகுல் புரம் பகுதியை சேர்ந்த  சையத் இப்ராஹிம்(44)  தொடர்பு  உள்ளது போலீசார் விசாரணையில் தெரிவித்தார். பின்னர் வந்தவாசி போலீசார் செங்கல்பட்டு பகுதிக்கு சென்று சையத் இப்ராஹிம் கைது செய்து வந்தவாசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் போலீசார் சையத் இப்ராஹிம்யிடம் விசாரணை மேற்கொண்ட போது தொடர்பில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வந்த அருண் (எ) அருணாச்சலம் மற்றும் செங்கல்பட்டு பகுதி சேர்ந்த சையத் இப்ராஹிம் ஆகிய இரண்டு பேரையும்  போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இது தொடர்பாக அருண் (எ) அருணாசலம் கொடுத்த தகவலின் படி  போலீசார் சென்ற போது அவர்கள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர் என்று  போலீசார் தெரிவித்தனர். மேலும் அருண் மீது வந்தவாசி காவல் நிலையத்தில் 4 வழக்குகள் மற்றும் சையத் இப்ராஹிம் மீது செங்கல்பட்டு காவல் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அருண்  வீட்டில் பதுக்கி வைத்திருந்த 48.50 லட்சம் ரூபாய் பணத்தையும், 83 சவரன் தங்க நகைகளையும்,ஒரு மடிக்கணினி,6 செல்போன்கள் போலீசார்  பறிமுதல் செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து வீட்டில் பதுக்கி வைத்து இருந்த பணம் தங்க நகைகளை நள்ளிரவில் போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ