Homeசெய்திகள்க்ரைம்நூதன முறையில் கார்கள் விற்பனை - ஒருவர் கைது 

நூதன முறையில் கார்கள் விற்பனை – ஒருவர் கைது 

-

- Advertisement -

சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக கூறி வாடகைக்கு சொகுசு கார்களை எடுத்து அதனை விற்பனை செய்தது போலிஸார் விசாரனையில் அம்பலமானது.  நூதன முறையில் கார்கள் விற்பனை - ஒருவர் கைது 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் வினிஸ் (வயது 34). இவர் நான்கு கார்களை வைத்து வாடகைக்கு விட்டு வருகிறார். தோவாளை தேவர் நகரை சேர்ந்த வீர லட்சுமணன் (24), ஏர்வாடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த சிவா (35),ஏர்வாடி எல்.என்.எஸ்.புரத் தைச் சேர்ந்த ஜெகன் (32) ஆகியோர் வினிஸிடம் வாடகைக்கு கார் எடுத்து சுற்றுலா வுக்கு பயணிகளை அழைத்துச் செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 28-ந் தேதி வினிஸ் வீட்டுக்கு வந்த மூன்று பேரும் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து விட்டு 10 நாட்களில் திருப்பி தந்து விடுவதாக கூறி விட்டு சென்றனர்.ஆனால் இதுவரை வாடகை பணமும் கொடுக்கவில்லை, வாகனங்களையும்  ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.மேலும் அவர்கள் தலைமறைவானது தெரிய வந்தது.இது குறித்து ஆரல்வாய் மொழி காவல் நிலையத்தில்  புகார் கொடுத்ததில்  போலீசார் வழக்குப்பதிவு  செய்து காரை எடுத்து  தலைமறைவான மூன்று  பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில்  எல்.என்.எஸ்.புரத்தை சேர்ந்த ஜெகன் என்பவரை போலிஸார்  கைது செய்தனர். பிறகு நடத்திய விசாரனையில்  கார்களை வாடகைக்கு எடுத்து விட்டு திருப்பி கொடுக்காமல் குறைந்த விலையில் வேறொருவரிடம் விற்பனை செய்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து செய்தனர். இந்த வழக்கில்  தொடர்புடைய மேலும் இரண்டு  பேரையும் போலிஸார்  தேடி வருகின்றனர். இதேபோல் கார்களை வாடகைக்கு எடுத்து வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? எனவும் விசாரணை நடந்தி வருகின்றனர்.

எம்பி துரை வைகோவின் லெட்டர் பேடை தவறாக பயன்படுத்திய இளைஞர் கைது

MUST READ