Homeசெய்திகள்க்ரைம்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீன்டல் – ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீன்டல் – ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது

-

- Advertisement -

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில்,  மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீன்டல் – ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைதுகோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒன்றிய  அரசின் சார்பில் சிபிஎஸ்சி பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இதை பாதுகாப்பு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் ராஜன் என்பவர் அங்கு மாணவ, மாணவியருக்கு ஓவியம் கற்றுக் கொடுப்பதுடன் யோகா பயிற்சியும் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சிகளின் போது உடலின் அங்கங்கங்களை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள்,  பள்ளியின் முதல்வரிடம் புகார் அளித்தனர்.  இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பள்ளியின் முதல்வர்  , ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுட்டதை விசாரித்து உறுதி செய்தார். இதனையடுத்து இது குறித்து காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பள்ளியின் முதல்வர் புகார் அளித்தார்.

பள்ளி முதல்வர் அளித்த புகாரின் பேரில்,ஒன்றிய  அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராஜன் என்பவரை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மகளிர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள்… சமூகவலைதளங்களில் கூவிக் கூவி விற்பனை..!

MUST READ