வேலை வாங்கித் தருவதாக அழைத்து சென்று இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை, வீடியோ வெளியிடுவதாக கூறி 8 முறை மிரட்டி வன்புணர்வு செய்து 99,000 ரூபாய் பணம் பறிப்பு.
பிரபல தனியார் செல்போன் விற்பனையகத்தில் பணிபுரியும் நபர் கைது. சென்னை பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 20வயது பெண் புகார் ஒன்றை அளித்துள்ளனர் அதில், கூடுதல் சம்பளம் வேண்டி Apna App மூலம் வேலைக்கு பதிவு செய்ததாகவும்.
இந்த ஆப் மூலம் இளம்பெண் வேலைக்காக பதிவு செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி தொடர்பு கொண்ட நபர் வேளச்சேரி பூர்வீகாவில் வேலை பார்ப்பதாகவும் அங்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஆகஸ்ட் 17ம் தேதி நேர்காணலுக்கு பழந்தாங்கல் ரயில் நிலையம் அருகே வருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி இளம்பெண் பழவந்தாங்கல் ரயில் நிலையம் இறங்கியுள்ளார். அங்கிருந்து அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ராமாபுரம் ஒரு வீட்டிற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மயங்கியவுடன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மயக்கம் தெளிந்து பெண் எழுந்து பார்த்த போது ஆடைகள் கலைந்த நிலையில் இருந்துள்ளார். இதனை உமா மகேஷ் வீடியோ எடுத்து வைத்து வெளியில் சொன்னால் சமூக வலைதளத்தில் பரப்பி விடுதாக கூறியுள்ளார்.
அவ்வப்போது வீடியோவை காட்டி மிரட்டி 8 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மிரட்டி ஒரு முறை 50 ஆயிரம் ரூபாயும், மற்றொரு முறை 49 ஆயிரம் ரூபாய் பணமும் ஜிபே மூலம் வாங்கியுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பிரபல செல்போன் விற்பனையகத்தில் பணிபுரியும் உமா மகேஷ்(எ) ஷான் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கஞ்சாவுடன் சிக்கிய பிரபல ரவுடி : போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற போது கால் முறிவு