Homeசெய்திகள்க்ரைம்மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - அரசு கலைக் கல்லூரி பேராசிரியரை தாக்கி  ஆய்வக கணினி பொருட்களை ...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – அரசு கலைக் கல்லூரி பேராசிரியரை தாக்கி  ஆய்வக கணினி பொருட்களை  உடைத்த 16 மாணவர்கள் 

-

- Advertisement -

லால்குடி அருகே அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டதால் கல்லூரி ஆய்வகம் கணினி பொருட்களை  உடைத்த 16 மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து குமுளூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். வணிகவியல் பேராசிரியர் வினோத்குமார் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் பேராசிரியர் வினோத்குமார் வணிகவியல் துறையில் பயிலும் மாணவிகளுக்கு செல்போன் மூலம் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் அவரது அறைக்கு மாணவிகளை வர சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.  கடந்த 24ம் தேதி அதை வகுப்பில் பயிலும் சக மாணவர்களிடம் இந்த மாணவிகள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமாரிடம் கேட்டுள்ளனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு கலைக் கல்லூரி பேராசிரியரை தாக்கி  ஆய்வக கணினி பொருட்களை  உடைத்த 16 மாணவர்கள்
கல்லூரி பேராசிரியர் வினோத்குமார்

அவரோ உங்கள் வேலையை பாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பேராசிரியர் வினோத்குமாரை அடித்தும்,  கல்லூரியின் ஆய்வகம்,  கணினி பொருட்களை சேதப்படுத்தியும் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து லால்குடி சரக காவல்துறை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து  பேராசிரியர் வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி  பேராசிரியர் வினோத்தை தாக்கிய மாணவர்கள் 16 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கௌரவ விரிவுரையாளர் வினோத்தை மாணவர்கள் தாக்கும் பொழுது கணினி மையத்தில் இருந்த பொருட்கள் கணினிகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ 1.50 லட்சம் ரூபாய் எனவும், இந்த செலவுகளை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 16 மாணவர்களும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே மீண்டும் கல்லூரிக்கு அனுமதிக்கப்படுவர் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடன் பயிலும் சக மாணவிக்கு ஏற்பட்ட பாலில் தொல்லை பிரச்சனைக்கு நீதி கேட்க சென்ற மாணவர்கள் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

MUST READ