சிறுமிக்கு பாலியல் தொல்லை – சாமியார் கைது
17 வயது சிறுமி பெற்றோர் இல்லாததால் உறவினர்கள் ஆசிரமத்தில் சேர்த்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சித்திரவதை செய்து வந்த சாமியாரை கைது செய்த போலீசார்.
ஆசிரம பணிப்பெண் உதவியுடன் ரயிலில் தப்பி செல்ல முயன்று சக பயணியிடம் நடந்த விவரங்களை கூறி போலீசில் புகார் அளித்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் எம்.வி.பி. காலனியில் உள்ள ஒரு ஆசிரமத்தில் இரண்டு ஆண்டுகளாக சாமியார் தன்னை பாலியியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக அனாதை சிறுமி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, சுவாமிஜியை போலீசார் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தை சேர்ந்த சிறுமி (15) சிறுவயதிலேயே பெற்றோர் இறந்ததால் உறவினர் வீட்டில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த அவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விசாகப்பட்டினம் புது வெங்கோஜிபாலத்தில் உள்ள ஞானானந்தா ஆசிரமத்துக்கு உறவினர்கள் அனுப்பி வைத்தனர்.
ஆசிரமத்தின் நிர்வாகி பூர்ணானந்த சாமியார் பசுக்களுக்கு தீவனம் கொடுப்பது, சாணம் எடுப்பது போன்றவற்றை சிறுமி மூலம் செய்ய வைத்து வந்தார். நள்ளிரவுக்குப் பிறகு சிறுமியை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியியல் சீண்டலில் ஈடுப்பட்டு பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
ஒரு வருடமாக சிறுமியை அறையில் வைத்து அவரது கால்களில் சங்கிலியால் கட்டி சித்திரவதை செய்து வந்துள்ளனர். சரியாக சாப்பாடு வழங்காமலும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறைதான் குளிக்க வேண்டும். அன்றாட இயற்கை உபாதைகளுக்கு கூட செல்லவிடாமல் வாளியில் செல்ல வைத்து இரண்டு வருடங்கள் சித்திரவதை செய்யப்பட்டு வந்துள்ளார்.
இந்த டார்ச்சர் தாங்க முடியாமல் ஆசிரமத்தில் பணி புரியும் பெண்ணின் உதவியுடன் கடந்த 13ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி ஆசிரமத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். விசாகப்பட்டினத்தில் இருந்து திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி வந்துள்ளார். தான் சந்தித்த துன்பங்களை சக பெண் பயணியிடம் கூறினார். இதனால் அந்த பெண் இரண்டு நாட்களுக்கு முன் கிருஷ்ணா மாவட்டம், காங்கிபாடு என்ற இடத்தில் உள்ள விடுதியில் சிறுமியை சேர்க்க முயன்றார்.
ஆனால் விடுதி உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் இருந்து கடிதம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறியதால் காங்கிபாடு காவல் நிலையத்திற்கு சென்றனர். பின்னர் நடந்த விவரங்களை கேட்ட போலீசார் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு, சிறுமியை குழந்தைகள் நலக் காப்பகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி ஆசிரமத்தில் அனுபவித்த நரகத்தை விவரித்தார். இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல ஆணையகத்தின் உறுப்பினர்கள் சிறுமியை விஜயவாடாவில் உள்ள திஷா காவல் நிலையத்திற்கு அனுப்பி பூர்ணானந்த சாமி மீது போக்சோ வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக விஜயவாடா பழைய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விசாகப்பட்டினம் போலீசார் சாமியாரை கைது செய்தனர். ஆசிரம நிலங்களை சிலர் அபகரிக்கப் பார்ப்பதாகவும் இதன் ஒரு பகுதியாக தன் மீது பாலியியல் குற்றச்சாட்டில் சிக்க வைத்த சதி என்றும் அவர் குறிப்பிட்டார். எனவே இந்த வழக்கில் சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றார்.
கடந்த 15ம் தேதி, ஆசிரமத்தில் தங்கியிருந்த சிறுமி காணாமல் போனதாக ஆசிரம நிர்வாகிகள் புகார் அளித்திருந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் மேலும் ஆசிரமத்தில் பல மைனர் சிறுமிகள் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களையும் மீட்டு காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். சாமியாரால் கர்ப்பம் தரித்தவர்களுக்கு பலமுறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.