Homeசெய்திகள்க்ரைம்ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!

-

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!

கடந்த மாதம் ஜூலை 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பாஜக அஞ்சலை, அதிமுக மலர்கொடி உள்ளிட்ட 21 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், வழக்கறிஞர் அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!

யார் இந்த அஸ்வத்தாமன்?
வடசென்னையின் பிரபல தாதா ரவுடி நாகேந்திரனின் மகன். நாகேந்திரனுக்கு இரண்டு மகன்கள். ஒருவன் அஸ்வத்தாமன், காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருக்கிறான். மற்றொரு மகன் அஜித் ராஜு. இவன் பாஜகவில் மிக முக்கிய நிர்வாகியாக இருக்கிறான்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் அஸ்வத்தாமனுக்கு இருந்த மோடிவ் என்ன?
இரண்டு மிக முக்கியமான மோட்டிவ்-கள் இருக்கிறது. ஒன்று பார் கவுன்சில் தேர்தல். இன்னொன்று நிலத்தகராறு.

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!
ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன்

அதாவது வழக்கறிஞரான அஸ்வத்தாமன் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட எல்லா வகையிலும் முயற்சித்திருக்கிறார். ஆனால், அவர் போட்டியிடாத அளவுக்கு தடை ஏற்படுத்தி செக் வைத்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங்.  இதில் கடுப்பான அஸ்வத்தாமன் சிறையில் இருக்கும் தன் அப்பா ரவுடி நாகேந்திரனிடம் நடந்ததை சொல்லி புலம்பி இருக்கிறான். விஷயத்தை கேள்விப்பட்ட நாகேந்திரன் கடுங்கோவமாகி ஆம்ஸ்ட்ராங்கை பழி வாங்க தக்க சமயத்திற்காக காத்திருந்திருக்கிறான்.

அதே சமயத்தில் இன்னொரு விசயமும் நடந்திருக்கிறது. திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஒரக்காடு ஊராட்சியில் உள்ள பிரபல சோப்பு கம்பெனிக்கு சொந்தமான இடம் சுமார் 155 ஏக்கர் விற்பனைக்கு வந்திருக்கிறது. அந்த இடத்தை மனீஷ் என்பவரும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி ஒருவரும் வாங்க முடிவு செய்தனர். அப்போது அஸ்வத்தாமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலையிட்டு 155 ஏக்கர் நிலத்தில் சுமார் 10 ஏக்கர் தங்களுக்கு தர வேண்டும் என்று கட்டப்பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள்.

அதாவது ஒரு ஏக்கர் சுமார் ரூ. 2 கோடி எனவும் சுமார் ரூ. 20 கோடி மதிப்புடைய இடத்தை தங்களுக்கு தர வேண்டும் என்று அஸ்வத்தாமன் மிரட்டி இருக்கிறார். ஆனால் மனீஷும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி இந்த பஞ்சாயத்து தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கிடம் சென்றிருக்கிறார்கள். உடனே ஆம்ஸ்ட்ராங் தலையிட்டு அஸ்வத்தாமனிடம் பேசும்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட போது, “இந்த பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிட்டு சிக்கலில் சிக்கி கொள்ள வேண்டாம் எனவும் சின்ன பையன் போல நடந்துகொள்” எனவும் ஆம்ஸ்ட்ராங் அஸ்வத்தாமனை எச்சரித்திருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!
ரவுடி நாகேந்திரன்

இது குறித்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தையான ரவுடி நாகேந்திரனிடம் அஸ்வத்தாமன் கொண்டு சென்றிருக்கிறார். இதனால் சிறையில் இருந்து கொண்டே நிலத்தை வாங்க உள்ள  உரிமையாளர் மனீஷூக்கு ரவுடி நாகேந்திரன் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து அந்த மிரட்டல் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனாலும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் தான், திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூரில் தொழில் அதிபர் ஜெயப்பிரகாஷ் என்பவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் அஸ்வத்தாமனை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது தன்னை போலீசார் கைது செய்ய முக்கிய காரணம் ஆம்ஸ்ட்ராங் தான் என அஸ்வத்தாமன் நினைத்திருக்கிறான்.

ஆகையால் ஆம்ஸ்ட்ராங் மீது அஸ்வத்தாமனுக்கு முன்விரோத பகை புகைந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் உடல் நலம் இல்லாமல் இருக்கும் ரவுடி நாகேந்திரன் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, விசிட்டர்ஸ் என்ற அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகளான புன்னை பாலு, ஹரிஹரன், அருள், அஞ்சலை, மலர்க்கொடி மற்றும் ஆருத்ராவில் இருந்து சில பேரும் நாகேந்திரனை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புகளில்தான் கொலைச் சதி தீட்டப்பட்டுள்ளது.

வக்பு சட்டத்திருத்த மசோதா திருத்தம் என்ன சொல்கிறது ?

அந்த சதி திட்டத்தில் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரும் முழுவீச்சில் செயல்பட்டிருக்கிறார்கள். இதில் தற்போது ரவுடி நாகேந்திரனின் மகனும் அஸ்வத்தாமனின் சகோதரரான பாஜக முக்கிய நிர்வாகி அஜித் ராஜுயையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட அன்று அஸ்வத்தாமன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளான். அதாவது கொலை நடந்த அன்று நான் இந்தியாவிலேயே இல்லை என்று காட்டிக் கொள்வதற்காக முன்னெச்சிரிக்கையில் இறங்கியுள்ளான்.

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!
புரட்சி பாரதம் கட்சி பூவை ஜெகன் மூர்த்தி

அதுமட்டுமில்லாமல் அஸ்வத்தாமன் புரட்சி பாரதம் கட்சி பூவை ஜெகன் மூர்த்திக்கு மிக மிக நெருங்கிய நட்புடன் இருந்திருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!

இதில் கொடுமை என்னவென்றால் இந்த அஸ்வத்தாமன் ஆம்ஸ்ட்ராங் 16வது நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியிலும் பூவை ஜெகன் மூர்த்தி, செல்வப் பெருந்தகையோடு கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை- அஸ்வத்தாமன் கைது பின்னணியில் அதிர்ச்சிகர தகவல்கள்!
ஆம்ஸ்ட்ராங் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழா

 

 

இன்னும் திடுக்கிடும் தகவல் என்னவெனில் சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவில் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு குழந்தைக்கு சிறப்பு செய்வதிலிருந்து நிகழ்ச்சியில் முழுவதுமாக பங்கேற்றுள்ளார்.

MUST READ