Homeசெய்திகள்க்ரைம்சிவகங்கை : மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை

சிவகங்கை : மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை

-

சிவகங்கை : மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே ஆலடி கண்மாய் தோட்டத்தில்,மஞ்சு விரட்டு போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜெயசூரியா மற்றும் சுபாஷ் ஆகியோர் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் கொண்ட கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டு்ள்ளனர். கொலை செய்யப்பட்டவர்கள் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மஞ்சுவிரட்டு மாடு பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சமீப காலமாக தொடர் கொலை, கொள்ளை மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நாச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த ஆண்டியின் மகன்கள் ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் மஞ்சுவிரட்டுக்காக மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

திடீரென அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பிய அஜித்!

இருவருடைய நண்பர்கள் ராஜேஷ் (சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள அரண்மனை தெருவில் வசிப்பவர்), நவீன் (சாத்தரசன் பகுதியை சேர்ந்தவர்), அஜய் (காளையார் கோவில்)ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் மஞ்சு விரட்டு போட்டிகளில் தனது மாடுகளை அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜூன் 22ம் ஆம் தேதி பனங்குடியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தனது மாடுகளை அவிழ்த்து விட்டபோது அதனை புது பட்டியை சேர்ந்த மதன் என்பவரது நண்பர்கள் பிடித்துள்ளனர். அதில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட தகராற்றில் கை கலப்பானதாக கூறப்படுகிறது.

பின்னர் ஜூன் 30 அன்று ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரும் தனது நண்பர்கள் ராஜேஷ், நவீன் அகியோருடன் காளையார் கோவில் அருகே உள்ள கே.கே.ஆர் நகர் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பிற்கு பக்கதில் இருக்கும் விவசாய நிலத்தில் தனது மாடுகளுடன் தங்கியதாக தெரியவருகிறது. அப்போது நள்ளிரவில் அப்பகுதிக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அண்ணன் தம்பிகளான ஜெயசூர்யா, சுபாஷ் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியதாக  சம்பவ இடத்திலிருந்து தப்பிய ராஜேஷ், நவீன் ஆகிய இருவரும் காளையார்கோவில் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற டி.எஸ்.பி. சிபி தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

தடயங்கள் சேகரிக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடை பெற்று வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட காவல்துறையினர் 2 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர் கொலை, கொள்ளை மற்றும் வெடி குண்டு போன்ற சம்பவங்களால் சிவகங்கை மக்கள் பதற்றத்துடன் உள்ளனர். மஞ்சு வீட்டில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி இருவரும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ