Homeசெய்திகள்க்ரைம்விடுதியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கை வரிசை - திருடன் சிக்கியது எப்படி?

விடுதியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கை வரிசை – திருடன் சிக்கியது எப்படி?

-

திருப்பூர் விடுதியில் அறை எடுத்து தங்கி ஈரோட்டில் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர திருடனை போலீஸார் கைது செய்தனர்.

விடுதியில் தங்கி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கை வரிசை - திருடன் சிக்கியது எப்படி?

ஈரோடு சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி 7-வது வீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (59). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். பன்னீர் செல்வமும், அவருடைய மனைவியும் ஈரோடு அடுத்த மேட்டுக்கடையில் உள்ள உறவினர் இல்ல திருமண விழாவுக்காக சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்து ஒரு மர்ம நபர் திபு திபுவென வெளியேறி ஓடி வந்தார். அந்த நபரை பன்னீர்செல்வம் பிடிக்க முயன்றும் அவர் தப்பி சென்று விட்ட நிலையில், பின்னர் பன்னீர்செல்வம் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 சவரன் தங்க நகை திருட்டு போய் இருந்தது தெரிய வந்துள்ளது.

இது குறித்து பன்னீர் செல்வம் அளித்த புகாரின் பேரில், சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் அருகே போலீசார் சோதனை செய்தபோது அங்கு கேட்பாரற்று ஒரு மோட்டார் பைக் இருந்தது. திருட வந்த நபர் அங்கேயே மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்ததில் புதரில் பதுங்கி இருந்த திருடனை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அந்த நபர் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த வெங்கையா என்பதும், சில தினங்களாக திருப்பூரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கொண்டு சுற்று வட்டார பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. ஈரோடு பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடி கொண்டு அதில் நகரை சுற்றி பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு மளிகை கடை உரிமையாளர் வீட்டில் திருடிய போது சிக்கி உள்ளார். அவரிடம் இருந்து 20 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டிருப்பதும், ஆந்திராவில் மட்டும் 30.க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் கைதான வெங்கையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

திமுக என்னும் ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் விஜய் – திண்டுக்கல் லியோனி!!

MUST READ