Homeசெய்திகள்க்ரைம்செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை

-

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணைசெந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு தொடர்பான விசாரணை கடந்த திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து உடனே விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. உடல்நிலை பாதித்த நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள்? எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்த செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று(ஜூலை 24) விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது ஜாமீன் கேட்பதற்கு என்று சில  வழிமுறைகள் இருக்கிறது என்று அமலாக்கத்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள்:

இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது, அது குறித்து  முதலில் உங்கள் பதில் என்ன ?

இதுவரை அது குறித்து பதில் இல்லை

அமலக்கத்துறை :-

பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதில் தனது பங்களிப்பு இல்லை என அதில் உள்ள தரவுகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது

நீதிபதிகள்:-

நீங்கள் கைப்பற்றிய  டிஜிட்டல் ஆவணங்களில் செந்தில் பாலாஜி தொடர்புடைய விவரங்கள் எதில் இடம் பெற்று இருக்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள் என மீண்டும் மீண்டும் அமலாக்கத் துறைக்கு கேள்வி

 

எங்களது இந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளிக்காமலேயே இருக்கிறீர்கள் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

நாங்கள் கேட்பது மிக சாதாரண கேள்வி அதற்கு நாங்கள் உங்களிடம் சுற்றி வளைக்காமல் நேரடியான சாதாரண பதிலை தான் எதிர்பார்க்கிறோம் என மீண்டும் நீதிபதிகள் அமலாக்கத்துறையிடம்  தெரிவித்தனர். ஆனாலும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில் இல்லை.

MUST READ