சின்னசேலம் அருகே சோளக்காட்டில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டீ மாஸ்டர் குமரேசன் கைது – தனிப்படை போலீசார் நடவடிக்கை.
மது அருந்தி கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்க நினைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட குமரேசன் பரபரப்பு வாக்குமூலம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தில் வசித்து வந்த பெண் (நிர்மலா) ஒருவர் தனது கணவரை இழந்த நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி அன்று பால் சொசைட்டிக்கு சென்று பால் ஊற்றிவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது
அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் டிசம்பர் 27-ஆம் தேதியன்று காலை அவரது வீட்டின் அருகே உள்ள சோளக்காட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுத நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சின்னசேலம் போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ரஜத் சதுர்வேதி தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நாககுப்பம் கிராமத்தைச் சேர்ந்த டீ மாஸ்டர் குமரேசன் என்பவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சம்பவம் நடைபெற்ற அன்று அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாகவும் அப்போது சாலையில் நடந்து சென்ற பெண்ணை (நிர்மலாவை) உல்லாசத்திற்கு அழைத்ததாகவும், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அவரை தாக்கி துணியை அவரது கழுத்தில் மாட்டி அவரை தரதரவென சோளக்காட்டிற்குள் இழுத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து விட்டு தன் சென்றுவிட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மது போதையில் அவர் தாக்கியதில் பெண் (நிர்மலா) உயிரிழந்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து குமரேசன் மீது கற்பழிப்பு மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சின்னசேலம் போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்ட குமரேசனை 9 நாட்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி ரீனா உத்தரவிட்டார்.
சின்னசேலம் அருகே இரண்டு குழந்தைகளின் தாய் பால் சொசைட்டிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது போதை ஆசாமியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மது போதையில் டீ மாஸ்டர் ஒருவர் உல்லாசத்திற்காக ஆசைப்பட்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.