Homeசெய்திகள்க்ரைம்பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை - ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது

பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை – ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைது

-

- Advertisement -

கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் பள்ளி சிறுவர்களை தாக்கி பணம் பறிப்பு விவகாரத்தில் ஜவுளிக்கடை பணியாளர்கள் இருவர் காவல்துறையினா் கைது செய்தனா்.பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு சரமாரியாக அடி, உதை - ஜவுளி நிறுவன ஊழியர்கள் கைதுசெங்கல்பட்டு, பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் 4 பேர் அதே பகுதியில்   12-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இறுதியாண்டு தோ்வு முடிந்த நிலையில் சிறுவர்கள் 4 பேரும் கடந்த சில நாட்களாக கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்த கைப்பையில் இருந்து தவறுதலாக ரூ.300 பணத்தை எடுத்ததாக தெரிகிறது.

இதை கண்ட ஜவுளி நிறுவன மேலாளர்களான கவியரசன், சேக் அலாவுதீன் “பணத்தை திருடுகிறீர்களா” என்று கேட்டு சிறுவர்கள் 4 பேரையும் அறைக்குள் வைத்து பூட்டி பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனா். மேலும் அவர்களின் செல்போனையும் பறித்து “கூகுள் பே” மூலம் ரூ10ஆயிரத்து 500ஐ பறித்துக் கொண்டு சிறுவர்களை விரட்டியடித்தனர்.

இதில் பலத்த காயமடைந்த சிறுவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர். மேலும் தாக்குதல் நடத்தி பணம் பறித்த ஜவுளி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோடம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது இதையடுத்து சிறுவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கவியரசன், சேக் அலாவுதீன் இருவா் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவாக இருந்த சாமியார் – காவல்துறையின் அதிரடி வேட்டையால் கைது

MUST READ