Homeசெய்திகள்க்ரைம்இன்ஸ்டா மூலம் சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன் கைது

இன்ஸ்டா மூலம் சிறுமியை அழைத்துச் சென்ற சிறுவன் கைது

-

- Advertisement -

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை மயக்கி அழைத்துச் சென்ற சிறுவன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண்ணை கடந்த 6ம் தேதி மதுரையில் உள்ள உறவினர் வீட்டு இறுதி சடங்கிற்க்கு செல்வதற்காக சென்று உள்ளார்.

அப்போது தனது 13 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் 9ம் தேதி இரவு ஊரிலிருந்து வந்து பார்த்தபோது சிறுமி வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர்கள் தங்களுக்கு தெரியாது எனக் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேவிகா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

போலீசார் விசாரனையின் போது சிறுமியின் செல்போனைக்கு தொடர்பு கொண்டு பேசிய போது அதில் பேசிய நபர் சிறுமியை கொண்டு வந்து விட்டு விடுவதாக தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு சிறுமியை கடந்த பத்தாம் தேதி அயனாவரம் பஸ் டிப்போ அருகே அந்த நபர் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டு, தொடர்ந்து சிறுமியிடம் அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகியது தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை மயக்கி அழைத்துச் சென்ற

மேலும், வீட்டில் ஆள் இல்லை என்று தெரிந்ததும் சிறுமியை அந்த நபர் வந்து அழைத்துச் சென்று அவரது வீட்டில் தங்க வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சிறுமைக்கு குறிப்பிட்ட அந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்தது போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து நேற்று சிறுவனை கைது செய்த அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

MUST READ