குடும்ப பிரச்சனையின் காரணமாகமாமாவை சரமாரியாக வெட்டி பலி செய்த மைத்துனர்
போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ராஜேஷ் 40.
இவர் திருமணம் ஆகி சாந்தி என்ற மனைவியும் தரணி ஸ்ரீ 17 தாரணி 13 இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.சாந்தி தேனி பிசி பட்டியில் தனியாக குடியிருந்து வருகிறார்.ராஜேஷ் போடி குப்பநாயக்கன்பட்டியில் வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்தது.
இந்நிலையில் சாந்தியின் சித்தி மகன் பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் சிவமூர்த்தி 29 தனது பெரியம்மா மகள் சாந்தியின் கணவர் ராஜேஷிடம் என் அக்காவுடன் சேர்ந்து வாழுங்கள் ஏன் தனியாக வசித்து வருகிறீர்கள் என கேட்டு உள்ளார். இதற்கு ராஜேஷ் சாந்தியை தரக்குறைவாகவும் ஒழுக்கக்கேடாகவும் பேசி உள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை தனியார் துவக்கப்பள்ளி அருகே நந்தவனம் தெருவில் ராஜேஷ் நடந்து வந்த போது சிவமூர்த்தி கறி வெட்டும் கத்தியால் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பலத்த காயத்துடன் ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.தனது மாமா அக்காவின் கணவரை வெட்டி விட்டு சிவமூர்த்தி போடி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இச்சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.சம்பவம் அறிந்த நகர் காவல் துறை ஆய்வாளர் ராமலட்சுமி சடலத்தை கைபற்றி உடல்கூறு பரிசோதனைக்கு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலை சம்பவம் குறித்து சிவமூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.