Homeசெய்திகள்க்ரைம்காதலை கைவிட மறுத்த மகள்... முட்டை பொரியலில் விஷம் வைத்த கொடூர தாய்... சங்கராபுரத்தில் அதிர்ச்சி...

காதலை கைவிட மறுத்த மகள்… முட்டை பொரியலில் விஷம் வைத்த கொடூர தாய்… சங்கராபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

-

- Advertisement -

சங்கராபுரம் அருகே இன்ஸ்டாகிராம் காதலை கைவிட மறுத்த மகளுக்கு முட்டை பொரியலில் எலி பேஸ்ட் விஷத்தை கலந்துகொடுத்து கொலை முயன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பட்டு பாரதியார் நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு குறிஞ்சி என்ற மகள் உள்ளார். இவர் சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் குறிஞ்சிக்கு இன்ஸ்டா கிராம் சமூக வலைதளம் மூலம் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த சாய்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் குறிஞ்சியின் தாய் மல்லிகாவிற்கு தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா, மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் காதலை கைவிட்டு விட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் குறிஞ்சி, தனது இன்ஸ்டா காதலன் சாய்குமார் உடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மல்லிகா, தனது மகள் குறிஞ்சியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி மல்லிகா வீட்டில் முட்டை பொரியல் செய்து, அதில் எலிபேஸ்ட் விஷ மருந்தை கலந்து  மகள் குறிஞ்சிக்கு சாப்பிட கொடுத்துள்ளார். இதனை அறியாத குறிஞ்சி, தனது அம்மா ஆசையோடு செய்து கொடுத்த முட்டை பொரியலை ருசித்து சாப்பிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் தாயார் மல்லிகா, முட்டை பொறியலில் விஷம் கலந்து கொடுத்ததாக தனது மகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குறிஞ்சி, வீட்டிலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர்  மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு குறிஞ்சிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக குறிஞ்சி அளித்த புகாரின் அடிப்படையில் வட பொன்பரப்பி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குறிஞ்சியின் தாயார் மல்லிகாவை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் காவல் துறையினர்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ