பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனையை கண்காணிக்க மப்டியில் சென்ற தனிப்படை போலீசாரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். அதில் ஒருவரை கைது செய்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த பில்லாலி தொட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் பில்லாலி தொட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை கண்காணிக்க மப்டியில் சென்றுள்ளார்.
அப்போது ஒரு சிறுவனிடம் விசாரித்த போது வந்தது யார்? என்று தெரியாமல் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சப் – இன்ஸ்பெக்டரை சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை சிறைபிடித்து, நெல்லிக்குப்பம் போலீசார் நேரில் வந்தால் மட்டுமே விடுவிப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நெல்லிக்குப்பம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி தனிப்படை போலீசாரை அழைத்து வந்தனர்.
இந்த சம்பவத்தில் போலீசாரை தாக்கியது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த அனந்தகுமார் (48) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறையா?… மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம்!