கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகி கோவிந்தன் மற்றும் பைப் லைன் பணியாளர் செல்வம் ஆகிய இருவரை பட்டாக்கத்தியால் தாக்கியவர் கைது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பங்களா தெரு பகுதியில் பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செல்வம் மற்றும் அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த திமுக நிர்வாகி கோவிந்தன் ஆகிய இருவரிடமும், அப்பகுதியைச் சேர்ந்த வல்லரசு பைப்லைன் பள்ளத்தை உடனடியாக அகற்றும் படி வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது திடீரென மது போதையில் இருந்த வல்லரசு பட்டாக்கத்தியால் செல்வம் மற்றும் திமுக நிர்வாகி கோவிந்தனை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த இருவருக்கும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தன் உறவினர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார்.
வல்லரசை போலீசார் கைது செய்து நள்ளிரவில் சங்கராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட வல்லரசுவுக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் தொழிலாளி கைது