தேனியில் மாமியாரை கொலை செய்த மருமகன். திருமணம் ஆன 9 மாதங்களில் ஏற்பட்ட கருத்நு வேறுபாடு காரணமாக வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லீலாவதி (37) சின்னச்சாமி தம்பதியினர். இவர்களுக்கு கெளசல்யா (21) என்ற மகளும் காமேஸ்வரன் (22) என்ற மகனும் உள்ளனர். கணவர் சின்னச்சாமி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த நிலையில். லீலாவதி மகன் மற்றும் மகளுடன் அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.
மகன் கமேஸ்வரன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மகள் கெளசல்யா பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கெளசல்யாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் மீணாட்சிபுரம் அருகே உள்ள கொழுஞ்சிபட்டியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வரும் பிச்சைமுத்து என்பவருடன் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு பிச்சைமுத்து அவ்வபோது லாரி ஓட்டுநர் பணிக்கும் சென்றுவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலே பிச்சைமுத்து அவரது மனைவி கெளசல்யாவை அடிப்பது, உடலில் சூடுவைப்பது, கடித்து வைப்பது என தொடர்ந்து தன் மனைவியை சித்ரவதை செய்துள்ளார். இதன்காரணமாக கெளசல்யா தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். கணவன் மனைவி இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பிச்சைமுத்து அல்லிநகரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை நீலாவதி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அங்கு வந்த பிச்சைமுத்து மாமியாருடன் தகராறு செய்துள்ளார் பின்னர் இருவருக்குமிடையே மோதல் ஏற்பட, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் லீலாவதியின் கை மற்றும் பின்னங் கழுத்தில் வெட்டியுள்ளார் பிச்சைமுத்து. இதில் லீலாவதி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பலியானார். மாமியாரை கொலை செய்த பின்னர் பிச்சைமுத்து யார் கண்களிலும் படாமல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
லீலாவதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது குறித்து அருகில் குடியிருந்தவர்கள் அல்லிநகரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லீலாவதியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர வீட்டின் கழிவறியில் கிடந்த கொலைக்கு பயண்படுத்தப்பட்ட அரிவாளை கைபற்றினர். அதனைத்தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்தில் உள்ள கைரேகை உள்ளிட்ட தடையங்களை சேகரித்தனர். பின்னர் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிச்சைமுத்து லீலாவதியை கொலை செய்ததை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் விரைந்த அல்லிநகரம் காவல்துறையினர் பிச்சைமுத்துவை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் அல்லிநகரம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மனைவியுடன் ஏற்பட்ட தகறாரில் வீட்டில் தனியாக இருந்த மாமியாரை வெட்டி கொலை செய்த சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் வருங்கால கணவரிடம் இந்த தகுதிகள் இருக்க வேண்டும்…. நடிகை ராஷ்மிகா மந்தனா!