Homeசெய்திகள்க்ரைம்திருவல்லிக்கேணியில்  ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐக்கு மற்றொரு வழிப்பறி சம்பத்திலும் தொடர்பு!

திருவல்லிக்கேணியில்  ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான எஸ்.எஸ்.ஐக்கு மற்றொரு வழிப்பறி சம்பத்திலும் தொடர்பு!

-

- Advertisement -

திருவல்லிக்கேணியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டு, ஆயிரம் விளக்கு பதியிலும் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் முகமது கௌஸ். இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவரது முதலாளி வாணியம்பாடி ஜூனைத் முகமது, மருத்துவ உபகரணங்கள் வாங்கி விற்பது என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். கடந்த டிசம்பர் 15ஆம் தேதி
சி.டி.ஸ்கேன் மெஷின் வாங்குவதற்காக ஜூனைத் முகமது கொடுத்த பணம் என கூறப்படும் ரூ.20 லட்சம் எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் திருவல்லிக்கேணி நோக்கி கௌஸ் சென்று கொண்டிருந்தார். திருவல்லிக்கேணி அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகே சென்றபோது, வருமான வரித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் எனக்கூறி அவரை வழிமறித்த ஒரு கும்பல், பின்னர் கவுஸை காரில் கடத்தி அவரிடமிருந்த ரூ.20 லட்சத்தை பறித்துக்கொண்டு் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அருகே இறக்கிவிட்டு சென்றனர்.

இது தொடர்பாக, கவுஸ் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, கவுசிடம் வழிப்பறியில் ஈடுபட்டது வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப் பிரபு மற்றும் திருவணல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் என்பது தெரிய வந்தது. தொடர் விசாரணைக்கு பின் 4 பேரையும் போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து 4 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் ஹவாலா புரோக்கர்கள், தங்கக் கடத்தலில் ஈடுபடும் குருவிகள் என சட்ட விரோத தொழிலில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து பல வழிப்பறி சம்பவங்களை செய்தது தெரிய வந்தது. மேலும் இந்த வழிப்பறி கொள்ளைகளுக்கு மூளையாக இருப்பது ஏற்கனவே பூக்கடை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டங்களில் பணியாற்றி, தற்போது சைதாப்பேட்டையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் சன்னி லாய்டு என தெரியவந்தது. தனது கூட்டாளிகள் கைதானதும் உத்தரகாண்ட் சென்று பதுங்கி இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டை, திருவல்லிக்கேணி தனிப்படை போலீசார் கடந்த ஜனவரி 14ம் தேதி கைதுசெய்து சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் கடைசியாக கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாய்டை, திருவல்லிக்கேணி போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துவிட்டு, நேற்று மீண்டும் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவர் கொடுத்த வாக்கு மூலத்தில், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி தனது தலைமையில் ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.20 லட்சம் ஹவாலா பணத்தை வழிப்பறி செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். ராயபுரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவர் கொண்டு வந்த ரூ.40 லட்சம் ரொக்கத்தில், ரூ.20 லட்சத்தை பறித்துக்கொண்டு அவரை விரட்டியடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தானும், திருவல்லிக்கேணி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் தனது கூட்டாளிகளான வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப் பிரபு, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங் ஆகியோர் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் வணிக வரித்துறை அதிகாரிகள் சதீஸ், சுரேஷ் ஆகியோரும் தங்களுடன் இருந்தனர் தெரிவித்துள்ளார்.

சன்னி லாய்டு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆயிரம் விளக்கு போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்துள்ளனர். வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப் பிரபு, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சனி லாய்டு மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் சதீஸ், சுரேஷ் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலும் சன்னிலாய்டு உள்ளிட்ட சிறையில் இருக்கும் 5 பேரையும் கைதுசெய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், வழக்கில் தொடர்புடைய அரிசு அதிகாரிகள் சதீஸ், சுரேஷ் இருவரை தேடி வருகின்றனர்.

MUST READ