Homeசெய்திகள்க்ரைம்மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டு – மர்ம நபா்களுக்கு போலீசாா் வலைவீச்சு

மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டு – மர்ம நபா்களுக்கு போலீசாா் வலைவீச்சு

-

- Advertisement -

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு நகை திருட்டில் ஈடுபட்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மூதாட்டியை கட்டி வைத்து நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை விரித்தனர்

மகனின் பெயரை சொல்லி கேட்டதால் அதிர்ச்சியில் உரைந்த மூதாட்டியின் கழுத்தில் கத்தி வைத்து திருடிய மர்ம நபர்கள். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மாந்துறை பகுதியை சேர்ந்தவர் 75 வயதுடைய மூதாட்டி நீலா. இவரது மகன் வினோத் வெளியூர் சென்றிருந்த நிலையில் நேற்று இரவு தனியாக வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.இன்று அதிகாலை வீட்டின் பின்புறம் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் அருகில் அமர்ந்து எழுப்பியுள்ளனர்.

பின்னர் கழுத்தில் கத்தியை வைத்து உனது மகன் வினோத் எங்கே என்று கேட்டு சத்தம் போட்டால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டி மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் செயினை முதலில் பறித்துள்ளனர். தொடர்ந்து மூதாட்டியின் கை கால்களை கயிற்றால் கட்டிப்போட்ட மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 2 பவுன் செயினையும் திருடிவிட்டு பின்னர் மூதாட்டியை அவிழ்த்து விட்டு சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி விடியும் வரை தூங்காமல் பின்னர் காலை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும் இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை மிரட்டி திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ? 

MUST READ