Homeசெய்திகள்க்ரைம்ஜெயிலில் நண்பர்களான திருடர்கள்… கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை…!

ஜெயிலில் நண்பர்களான திருடர்கள்… கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை…!

-

- Advertisement -

ஜெயிலில் நண்பர்களான திருடர்கள் திட்டம் போட்டு கோவில்பட்டி கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை மற்றும் 26 லட்சம் திருட்டு வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகமது சாலிஹாபுரத்தைச் சோ்ந்தவா் செய்யது சுலைமான் (50) கறிக்கடை நடத்தி வருகிறார். மேலும் ஆடு, மாடு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரமும் செய்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 9 தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, 45 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 26 லட்சம் ரொக்கப்பணம் ஆகிவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் ‌ வடக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மேலும் தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோவன்பட்டி விலக்கில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக தகவல் கூற இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தனர். விசாரணையில் இருவரும் சென்னை புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (24) மற்றும் காஞ்சிபுரம் பள்ளிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்பர் அலி என்ற அபூபக்கர் (23) என்பதும் இவர்கள் இருவரும் கோவில்பட்டி கறிக்கடை உரிமையாளர் செய்யது சுலைமான் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளடிக்கப்பட்ட சம்பவத்தில்  தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.

ஜெயிலில் நண்பர்களான திருடர்கள்… கறிக்கடை உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை…!இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை செய்தனர் விசாரணையில் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இருவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருப்பதாக தகவல் கூற உடனடியாக தனிப்படை போலீசார் இருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு தோப்பில் பதுங்கி இருந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த கணேஷ் ராஜ் என்ற ஜாக்கு கணேஷ் (20) மற்றும் சக்தி கணேஷ் (24), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 43 1/4 பவுன் தங்க நகை மற்றும் 4 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர போஸ் 35 என்பவரை திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடி அருகே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் காரில் சுற்றி வளைத்து பிடித்த போது பிளேடால் கழுத்து அறுத்து தற்கொலை முயற்சி செய்துள்ளான். தற்போது போலீஸ் பாதுகாப்பில் மதுரையில் சுபாஷ் சந்திர போஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது நண்பர்களாக மாறி பின்னர் திட்டம் போட்டு  திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் திருடப் போகும் இடங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு அங்கு ஒருவர் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து அப்பகுதியில் நோட்டமிட்டு திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இதே போல் தான் கோவில்பட்டியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் இதில் கைது செய்யப்பட்டுள்ள சக்தி கணேஷ்  கோவில்பட்டி பகுதியில் வேலை பார்த்துக்கொண்டு திருடப் போகும் இடங்களை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்துக்கு திட்டம் தீட்டி திருடி உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கோவில்பட்டியில் என்ன நடக்குது என்று பார்ப்பதற்காக நோட்டமிட வந்த போது தான் போலீசாரின் வாகன சோதனையில் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ