Homeசெய்திகள்க்ரைம்இது தான் கொலையின் காரணம் ... முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பகிர்ந்த வீடியோ

இது தான் கொலையின் காரணம் … முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பகிர்ந்த வீடியோ

-

இது தான் கொலையின் காரணம் ... முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பகிர்ந்த வீடியோஇது தான் கொலையின் காரணம் என முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வீடியோவை பகிர்ந்த தந்தை.

12 வயது மகளிடம் வாயில் துணியை வைத்து பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை மகளின்  தந்தை குவைத்தில் இருந்து வந்து கொலை செய்து மீண்டும் குவைத்து சென்றிருக்கிறார்.

ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டம் ஓபுலவாரிபள்ளி மண்டலம் கொத்தமாங்கம்பேட்டையில் குட்டா ஆஞ்சநேயுலு (59) என்ற மாற்றுத்திறனாளி கடந்த சனிக்கிழமை கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய மாங்கம்பேட்டையை சேர்ந்த பிரசாத் – சந்திரகலா தம்பதிக்கு 12 வயதில்  சிறுமி மகள் உள்ளார். பிரசாத் – சந்திரகலா குவைத்தில் தங்கி பணி புரிந்து வந்தனர். இதனால் இவர்களது 12 வயது மகளை அதே கிராமத்தில் வசித்து வந்த சந்திரகலா தங்கையான லட்சுமி மற்றும் வெங்கடரமணா தம்பதியினரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இது தான் கொலையின் காரணம் ... முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பகிர்ந்த வீடியோகடந்த வாரம் வீட்டில்  சிறுமி தூங்கி கொண்டுருந்தபோது வெங்கடரமணா தந்தை ஆஞ்சநேயுலு  அந்த சிறுமி வாயில் துணியை வைத்து அழுத்தி பாலியியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். சிறுமியின் சத்தம்கேட்டு லட்சுமி நடந்த விவரங்களை கேட்டு இதுகுறித்து யாருக்கும் சொல்ல வேண்டாம் எனக்கூறி அந்த சிறுமி தாய் சந்திரகலாவிற்கு போன் செய்து மகளை அழைத்து செல்லும்படி கூறி உள்ளார்.

உடனே சந்திரகலா குவைத்தில் இருந்து  மகளை வீட்டிற்கு அழைத்து வந்ததும் தங்கை லட்சுமிக்கு போன் செய்து கேட்டாள் என்ன ஆனது என்று சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் கவலையடைந்த சந்திரகலா தனது மகளிடம் நிதனமாக அருகில் அமரவைத்து கேட்டதற்கு நடந்த விவரங்களை கூறியதால் உடனடியாக ஓபுலவாரிப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வெங்கடரமணா லட்சுமி, ஆஞ்சநேயலுவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து கண்டித்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு லட்சுமி உறவினர்களுக்கு போன் செய்து தனது மாமனார் நடந்து கொண்ட விதம் குறித்தும் போலீசாருக்கு பணம் கொடுத்து அழைத்து வந்ததாக கூறி வந்துள்ளார்.

இதனால் சந்திரகலா தனது மகளுக்கு நடந்த சம்பவத்தையும் தவறு செய்தவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் அப்படியே அனுப்பிவிட்டதாக
தனது கணவர் பிரசாத்திடம் தெரிவித்தார். இதனால் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி பிரசாத் கூறியதால் போலீசில் சந்திரகலா புகார் அளித்தார். போலீசார் லட்சுமியை அழைத்ததால் லட்சுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் போலீசார் சந்திரகலாவை உன்னாள் தான் லட்சுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டால் அவருக்கு எதாவது நடந்தால் உன் மீது வழக்கு தொடர்வேன் மீண்டும் குவைத்திற்கு செல்ல முடியாது என போலீசார் மிரட்டி உள்ளனர்.

பின்னர் லட்சுமி உடல் நலம் தேறியவுடன் சந்திரகலாவை குவைத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். சந்திரகலா குவைத்திற்கு சென்று கணவரிடம் நடந்த விவரங்களை கூறி உள்ளார். இதனால் மனம் உடைந்த பிரசாத் 4 நாட்கள் விடுமுறையில் யாருக்கும் சொல்லி கொள்ளாமல் இந்தியா வந்து ஆஞ்சநேயலு வீட்டிற்கு சனிக்கிழமை இரவு சென்று கட்டிலில் தூங்கி கொண்டுருந்த ஆஞ்சயேலுவை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் மீண்டும் குவைத் சென்றார்.

ஆனால் ஆஞ்சநேயலு எதற்காக கொலை செய்யப்பட்டான் என்று தெரிய வேண்டும் என்பதற்காகவும், பெண் பிள்ளைகள் மீது கை வைத்தால் அவரது தந்தை, அண்ணன் தம்பியினால் இதுபோன்ற நிலை ஏற்படும் என்ற பயம் தவறு செய்பவர்களுக்கு இருக்க வேண்டும் எனக்கூறி நடந்த விவரங்களுடன் விளக்கமளித்து பிரசாத் வீடியோ பதிவு செய்து தவறு செய்தேன் அதற்குண்டான தண்டனை சட்டப்படி நான் ஏற்க தயாராக உள்ளேன். அதற்காக விரைவில் இந்தியா வந்து போலீசில் சரண் அடைவதாகவும் இந்த வீடியோவை முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து ஊடகத்தினரும் இதுபோன்ற சம்பவத்திற்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் போன்ற விவாதம் நடத்த வேண்டும் என பிரசாத் வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்பொழுது இந்த க்ரைம் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சதித்திட்டத்துடன் விசிகவுக்குள் நுழைந்த ஆதவ்அர்ஜுனா… எடப்பாடி வந்தால் இது நடக்கும்… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் எச்சரிக்கை!

MUST READ