Homeசெய்திகள்க்ரைம்மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி - பெங்களூரு பெண் கைது

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி – பெங்களூரு பெண் கைது

-

- Advertisement -

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி – பெங்களூரு பெண் கைது

அய்யப்பாக்கத்தை சேர்ந்த நபரிடம் மேட்ரிமோனி மூலம் ரூபாய் 9 லட்சம் சுருட்டிய பெங்களூருவை சேர்ந்த பெண்ணை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திருமணமாகாத ஆண்களை குறி வைத்து பல லட்ச ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி - பெங்களூரு பெண் கைது

ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் அசோக் சைதன்யா (வயது33).  இவர் ஆவடி காவல் ஆணையரகத்திற்குபட்ட அயப்பாக்கத்தில் தங்கி, தனியார் கால் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தனக்கு 33 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்ற வருத்தத்தில் இருந்ததாகவும், இதனால் அவரது பெற்றோரின் அறிவுறுத்தலின்படி தெலுங்கு மேட்ரிமோனியில் தனது சுய விவரத்தை பதிவேற்றம் செய்ததாகவும் தெரிகிறது. அதே வலைதள பக்கத்திலிருந்த ஆந்திர மாநிலம் வெங்கட்ராமன் என்பவரின் மகள் ஷ்ரவண சந்தியா என்பவரை அசோக் சைதன்யாவுக்கு பிடித்து போக இருவரும் பேசி வந்தனர்.

இந்நிலையில் தனது புகைப்படம் எனக் கூறி சினிமா நடிகை ஒருவரின் புகைப்படத்தை அனுப்பியதால், அதில் மயங்கிய அசோக் சைதன்யா அவர் கேட்கும் போதெல்லாம் 9 லட்சம் ரூபாய் வரை பணத்தையும், 65 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் அவரது முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் திருமணம் குறித்து பேசும் போது மறுப்பு தெரிவித்ததோடு அசோக் சைதன்யாவின் தொலைபேசி எண்ணை பிளாக் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அசோக் சைதன்யா ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்ற பிரிவில் புகார் அளித்தார்.

மேட்ரிமோனியின் மூலம் ரூ. 9 லட்சம் மோசடி - பெங்களூரு பெண் கைது

அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் சிக்னல் மூலம் பெங்களூருவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் பதுங்கி இருந்த ஷ்ரவண சந்தியாவை கையும், களவுமாக கைது செய்தனர். மேலும் அவர் தங்கியிருந்த அறையிலிருந்து 1 மடிக்கணினி, 3 செல்போன்கள், 6 சிம் கார்டுகளை பறிமுதல் செய்ததுடன், 8 மின்னஞ்சல் மற்றும் டெலிகிராம் பக்கத்தை முடக்கினர். பின்னர் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், அவர் திருமணமான ஆண்களை குறி வைத்து அவர்களிடமிருந்து பணத்தை பறித்துக்கொண்டு, அவர்களை பிளாக் செய்ததும், அந்த பணத்தை வைத்து பெங்களூருவில் உள்ள ஆண்களை ஏமாற்றி அவர்களுடன் பழகி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஷ்ரவண சந்தியாவிடம் பணத்தை இழந்தவர்களின் தகவல்களை திரட்டும் பணியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்..

MUST READ