Homeசெய்திகள்க்ரைம்திருப்பதி : ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்

திருப்பதி : ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்

-

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியலில் இருந்து ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்

திருப்பதி : ₹ 100 கோடி வரை திருட்டு சொத்து சேர்த்த ஊழியர்ஒரு பங்கை மட்டும் லோக்அதாலத் மூலம் தேவஸ்தானத்திற்கு வழங்கி ஜெகன் மோகன் ஆட்சியில் இருந்த போலீசார், அதிகாரிகள் பங்கு பிரித்து கொண்டதாக குற்றச்சாட்டு .

உண்டியலில் விழும் வெளிநாட்டு டாலர்களை கடத்த மலக்குடல் பிரிதாக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல்.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் வேலை செய்து வந்த தேவஸ்தான ஊழியரான ரவிக்குமார் அடிக்கடி கோயிலுக்குள் சென்று வந்து கொண்டு இருந்தார்.

இதனால் ஏற்பட்ட பழக்கத்தின் தொடர்ச்சியாக அவரை சுமார் 20 ஆண்டுகளாக உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பணியில் ஊழியர்களில் ஒருவராக தேவஸ்தான நிர்வாகம் நியமித்தது.

அவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணிக்கை பணம் கணக்கிடும் பகுதியில் இருந்து வெளியில் வந்த ரவிக்குமாரை பிடித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள்  தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது அவர் தன்னுடைய மலக்குடலில் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்திய அமெரிக்க டாலர்களை திருடி வைத்திருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

அப்போது அதற்கு முன் சுமார் பல ஆண்டு காலம் அவர் இதே போல் தினமும் ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைக்கும் வெளிநாட்டு டாலர்களை கடத்தி திருடியதும், அந்த பணத்தை பயன்படுத்தி சுமார் ₹ 100 கோடிக்கு மேல் அதிக மதிப்பு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, தங்க ஆபரணங்கள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை வாங்கி இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இது பற்றி அறிந்த தேவஸ்தான நிர்வாகம் விவகாரம் வெளியில் தெரிந்தால் தேவஸ்தானத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டு தேவஸ்தானம் மீது பக்தர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பாழாகிவிடும் என்று கருதி இந்த விவகாரத்தை லோக் அத்தாலத்திற்கு கொண்டு சென்றது. இந்தத் திருட்டு தொடர்பாக திருமலை காவல் நிலையத்தில் எஃப் ஐ ஆர் என் 24/2023 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து லோக் அத்தாலத்தில்  ரவிகுமார் திருடிய காணிக்கை பணத்தை கொடுத்து வாங்கிய சொத்துக்களில் ஒரு பகுதியை ரவிக்குமார் தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக கொடுப்பது போல் எழுதி வாங்கி கொண்டனர்.

அதிகாரிகளின் இந்த முடிவிற்கு தேவஸ்தான அறங்காவலர் குழுவும் அப்போது ஒப்புதல் அளித்தது. ஆனால் இது பற்றி அறங்காவலர் ஒரு இடத்திலும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்தனர்.

ஆனால் இந்த விவகாரத்தில் ரவிக்குமார் உண்டியலில் இருந்து திருடிய பணத்தின் மூலம் வாங்கிய சொத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் தேவஸ்தானத்திற்கு அவர் நன்கொடையாக கொடுப்பது போல் எழுதி வாங்கி கொண்டனர்.  மீதமிருந்த மற்ற பல  கோடி மதிப்புள்ள சொத்துக்களை போலீஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரி ஒருவர் ஆகியோர் தங்களுடைய உறவினர்களின் பெயர்களில் எழுதி வாங்கிக் கொண்டதாக  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டு காலமாக இந்த குற்றச்சாட்டுகள் இருந்தநிலையில் இதுகுறித்து செய்தி வெளியிட முயன்ற தனியார் செய்தி நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீது போலி ஆவணங்கள் வைத்து செய்தி வெளியிட முயன்றதாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருநாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு பிறகு காவல் நிலைய ஜாமினில் வெளியே விட்டனர். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சந்திரபாபு முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியூறுத்தி வருகின்றனர்.

இது பற்றி ஆந்திர மாநில சட்டமேலவை உறுப்பினர் ஒருவர் மாநில இந்து அறலையத் துறை அமைச்சர் ஆனம் விவேகானந்த ரெட்டியிடம் புகார் அளித்திருந்தார் .

அதன் அடிப்படையில் அமைச்சர் விவேகானந்த ரெட்டி ஆந்திர சட்டமேலவையில் இந்த முறைகேடு, மோசடி குறித்து பேசினார். கடந்த ஆட்சியில்  நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக அப்போது அறங்காவலர் குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவரான ரவிக்குமாரை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்து காணிக்கை பணத்தை திருடி அதன் மூலம் வாங்கிய சொத்துக்களில் தேவஸ்தானத்திற்கு வழங்கிய சொத்துக்கள் தவிர மற்ற சொத்துக்களை யார், யாருக்கு எந்த சூழ்நிலையில் எழுதி கொடுத்தார் என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும், பல கோடி  மதிப்புள்ள சொத்துக்களை தாங்கள் உறவினர்களில் பெயர்களில் எழுதி வாங்கி கொண்ட அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

 

தேவஸ்தானத்தில் பணி புரியும் ஊழியர் ஒருவரே  கோயிலுக்குள் இருந்து உண்டியல் பணத்தை  கடத்தி வந்து ₹ 100 கோடிக்கும் அதிக மதிப்பு உள்ள அமெரிக்க டாலர்களை திருடிய  தகவல் அறிந்த பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

 

உண்டியல் காணிக்கை பணத்தை கணக்கிடுவது போல் நடித்து திருடிய வெளிநாட்டு கரன்சிகளை பதுக்கி எடுத்து வருவதற்காக வெளிநாடுகளில்  இருந்து தங்கம் கடத்துபவர்கள் கொடுத்த ஆலோசனையின்படி ரவிக்குமார் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் தன்னுடைய மலக்குடலை பெரிது படுத்தி கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

MUST READ