Homeசெய்திகள்க்ரைம்காதலிக்க மறுத்ததால் ஆன்லைன் செயலி மூலம் டார்ச்சர்

காதலிக்க மறுத்ததால் ஆன்லைன் செயலி மூலம் டார்ச்சர்

-

- Advertisement -

சென்னை பெரிய மேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் செயலிகள் மூலம் டார்ச்சர் செய்த 17 வயது சிறுவன் கைது.

காதலிக்க மறுத்ததால் ஆன்லைன் செயலி மூலம் டார்ச்சர்பெண்ணின் முகவரிக்கு அமேசான் flipkart, swiggy, zomato போன்ற செய்திகள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்டர்கள் செய்து கேஷ் ஆன் டெலிவரி போட்டு அனுப்பி டார்ச்சர். ஒரே நாளில் 77 முறை ஓலா மற்றும் உபரில் வாகனங்கள் புக் செய்து பெண்ணின் வீட்டுக்கு அனுப்பியும் தொந்தரவு.

செயலியில் பயன்படுத்த இமெயில் செல்போன் ஆகியவற்றை ஆய்வு செய்து சைபர் கிரைம் போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

தற்போது சிறுவனுக்கு 18 வயது நிரம்பினாலும் 17 வயது இருக்கும் போது குற்றங்களை செய்ததால் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். 17 வயது சிறுவனும் 21 வயது கல்லூரி மாணவியும் காதலித்துள்ளனர் பெற்றோர்களுக்கு தெரிய வந்து பிரித்து வைத்துள்ளனர். இந்த காதல் விவகாரத்தில் சிறுவன் தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது

MUST READ