Homeசெய்திகள்க்ரைம்திருச்சி ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை - நடந்தது என்ன?

திருச்சி ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை – நடந்தது என்ன?

-

 

திருச்சி ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை  - நடந்தது என்ன?

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை மீது நடத்தப்பட்ட என்கவுண்டரில் நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே தனியார் வேளாண்மை கல்லூரி எதிரே உள்ள தைலமற காட்டுப்பகுதியில் இருவர் துப்பாக்கியுடன்  சுற்றிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததன். தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது ஒருவர் நாட்டுத் துப்பாக்கியுடனும் மற்றொருவர்  பெட்ரோல் பாட்டிலுடனும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது  இருவரும் அங்கு போலீசாரை பார்த்தவுடன் வாங்கடா போலீஸ் இங்கேயும் பிடிக்க வந்துட்டீங்களா என்று கூறி கொண்டே நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் நான் பெரிய ரவுடி திருச்சி எம் ஜி ஆர் நகரை சேர்ந்த துரை நான் தான் என்றும் என் பெயரை கேட்டால் மாவட்டமே நடுங்கும் என்று சொல்லி நாட்டுத் துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுட்ட நிலையில் காவல்துறையினர் அதிலிருந்து ஒதுங்கி உள்ளனர். பின்னர் காவல்துறையினர் பிரபல ரவுடி துறையை சரணடைய எச்சரித்து ஆலங்குடி உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கம் துரையை பிடிக்க முற்பட்டபோது துரை முதுகில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து இத்தோடு செத்தொலை என்று கூறி வெட்டியதில் உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்திற்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை மீது நடத்தப்பட்ட என்கவுண்டரில் நடந்தது என்ன?

 

பின்னர் துரை மீண்டும் காவல்துறையினரை வெட்ட முற்பட்டதால் ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் அவர் வைத்திருந்த பிஸ்டலால் வானத்தை நோக்கி சுட்டவுடன் துரையுடன் திரியுடன் கூடிய பெட்ரோல் பாட்டிலை கையில் வைத்திருந்த நபர் தப்பி ஓடிய நிலையில் பின்னர் துரை மீண்டும் காவல்துறையினரை தாக்க முற்பட்டதால் தற்காத்துக் கொள்வதற்காக துரையின் இடது முழங்காலில் காவல் ஆய்வாளர் முத்தையன் சுட்டபோது மீண்டும் காவல்துறையினரை வெட்ட முற்பட்டதால் துரையின் இடது மார்பிலும் சுட்டுள்ளனர்.

திருநின்றவூரில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

பின்னர் துரையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்த நிலையில் ஆம்புலன்ஸ் வர சற்று காலதாமதமானதால் காவல்துறை வாகனத்திலேயே துரையை மருத்துவமனைக்கு காவல்துறையினர் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வந்த நிலையில் அந்த ஆம்புலன்சில் குண்டடிப்பட்ட துறையை ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் துரை உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து அவரை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் துரையால் வெட்டுப்பட்டு கையில் காயமடைந்த ஆலங்குடி உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கத்தை சக காவல்துறையினர் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

MUST READ