Homeசெய்திகள்க்ரைம்சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் - போக்சோவில் கைது

சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் – போக்சோவில் கைது

-

- Advertisement -

துறையூர் அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் முசிறி போலீசாரிடம் இருந்து தப்பிய போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி.

சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் - போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த சகோதரர்கள் இருவர் போலீசிடமிருந்து தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இரட்டையர்களை கைது செய்த முசிறி போலீசார்  மாவு கட்டு போட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

துறையூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரிஷ் (25 ) ஹரிஹரன் (25) இருவரும் இரட்டைச் சகோதரர்கள். கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகளை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமிகள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமிகளை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறுமிகளின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரட்டையர்கள் சிறுமிகளிடம் அத்துமீறிய சம்பவம் குறித்து புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி மற்றும் முசிறி  சட்டம் ஒழுங்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஞானசேகரன் ஆகியோர் வழக்கில் தொடர்புடைய ஹரிஷ் மற்றும் ஹரிஹரன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து போக்சோ வழக்கில் கைது செய்தனர்.சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் - போக்சோவில் கைதுஅதனைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது  திருச்சி – நாமக்கல் சாலையில் முசிறி அருகே செவந்தலிங்கபுரம் பாலத்தில் போலீசாரிடமிருந்து இருந்து ஹரிஷ், ஹரிஹரன் இருவரும் தப்பி ஓடிய போது கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் இடது காலில் முறிவு ஏற்பட்டது இதையடுத்து போலீசார்

திருச்சி அரசு மருத்துவமனையில் இரட்டையர்கள் இருவருக்கும் மாவு கட்டு போட்டு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சிறுமிகளிடம் அத்துமீறிய இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது

MUST READ